• Mon. Nov 10th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் 66 இந்திய வம்சாவளிகள்… அமெரிக்கா திடுக்கிடும் தகவல்

Byகாயத்ரி

Dec 18, 2021

ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் 66 இந்திய வம்சாவளிகள் இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டிற்கான தீவிரவாதம் தொடர்பான ஆண்டறிக்கையை அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில், கடந்த நவம்பர் மாதம் வரையிலுமான புள்ளி விவரங்களின்படி, உலகளாவிய பயங்கரவாத அமைப்பான ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் 66 அமெரிக்க இந்திய வம்சாளிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் எந்த வெளிநாட்டு தீவிரவாதிகளும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படவில்லை என்றும் கூறி உள்ளது.
மேலும், தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவதில் அமெரிக்காவுக்கு இந்தியா முழு ஒத்துழைப்பு கொடுத்து இணைந்து செயல்படுவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடு கடந்த மற்றும் பிராந்திய தீவிரவாத சக்திகளை கண்டறிந்து அவற்றை ஒடுக்குவதில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) உள்ளிட்ட இந்திய தீவிரவாத எதிர்ப்புப் படைகள் சிறப்பாக செயல்படுவதாக அமெரிக்கா பாராட்டி உள்ளது.அதே சமயம், தீவிரவாத ஆட்சேர்ப்பு, வன்முறை தீவிரமயமாக்கல் மற்றும் மதங்களுக்கு இடையேயான பதட்டங்களைத் தூண்டுவதற்கு இணையத்தை பயன்படுத்துதல் போன்றவை இந்தியாவில் அதிகரிப்பதாக இந்திய அதிகாரிகள் கவலை கொண்டிருப்பதாகவும் அமெரிக்க அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.