• Fri. Apr 26th, 2024

65 ஆயிரம் ஆண்டு பழமையான நியாண்டர்தால் பாறை ஓவியம்!…

Byadmin

Aug 6, 2021

இன்றைக்கு உலகில் பரபரப்பாக பேசப்படுவது ஸ்பெயின் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட நியாண்டர்தால் மனிதர்களின் பாறை ஓவியமமாகும். ஸ்பெயின் நாட்டில் உள்ள நெர்ஜா குகையில் 6 பாறை ஓவியங்கள் கண்டறியப்பட்டன.

இந்த ஓவியம் குறித்து கார்டோபா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜோஸ் லூயிஸ் சன்சிடிரியன் கூறும் போது சிவப்பு நிற செங்குத்து கோடுகள் எங்களது குழுவினர் கண்டறிந்தனர். இந்த ஓவியங்களை கார்பன் டேட்டிங் செய்யததில் 43,500 ஆண்டுகள் முதல் 42,300 ஆண்டுகள் பழமையானவையாகும் என்று தெரியவந்தது. இதற்கு முன்பு தென் கிழக்கு பிரான்ஸ் நாட்டில் உள்ள காவெட் குகையில் கண்டறியப்பட்ட ஓவியம் 30 ஆயிரம் பழமையானது.

இந்த ஓவியங்கள் அந்த ஓவியங்களுக்கு முந்தயவை ஆகும். தற்போது கண்டறியப்பட்டுள்ள ஓவியங்கள் 65 ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை. இந்த ஓவியங்களை ஆய்வு செய்த விஞ்ஞானிகள் இந்த ஓவியம் இயற்கையாக அமைந்த பாறையின் திட்டுக்கள் இல்லை. இது வரையப்பட்ட ஓவியம் என்றனர். அந்த வகையில் இந்த ஓவியங்கள் நியாண்டர்தால் மனித இனம் வரைந்த ஓவியமாக இருக்கலாம் என்ற கணிப்புக்கு வந்தனர்.

நியாண்டர்தால் மனிதர்கள் ஹோமோசேப்பியன்ஸ் என்று சொல்லக்கூடிய நாகரீக மனிதர்களுக்கு முன்பு வாழ்ந்த சமூகம். இந்த சமூகம் தான் தீயை கண்டறிந்த சமூகம். ஜெர்மனி பகுதியில் தான் நியாண்டர்தால் மனிதர்கள் வாழ்ந்ததாக விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். அந்த வகையில் இந்த ஓவியம் நியாண்டர்தால் மனித இனம் வரைந்த ஓவியமாக இருக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

இந்த பாறை ஓவியம் குறித்து தொல்லியலாளர் நாராயண மூர்த்தியிடம் கேட்ட போது. இதே போன்ற 7 செங்குத்துக்கோடுகள் ஒரே சீராக பழனி பாப்பம்பட்டி பகுதியில் கண்டறிந்து 20 ஆண்டுகளுக்கு முன்பு செய்தியாளர்களிடம் தெரிவித்து அதனை செய்தியாக்கினேன். அப்போதே அந்த செங்குத்து கோடுகளுக்கு 60 ஆயிரம் ஆண்டுகள் என்று கணித்தேன்.

ஆனால் ஒன்றிய அரசு கட்டுப்பாட்டில் உள்ள தொல்லியல் துறையான ஏ.எஸ்.ஐ. அதனை ஏற்காமல் 2 ஆயிரம் ஆண்டுகள் என்று சொன்னது. தற்போது ஸ்பெயினில் கண்டறியப்பட்ட நியாண்டர்தால் ஓவியமாக ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால் பாப்பம்பட்டி ஓவியத்தை அப்பர் பாலியோலித்திக் ஓவியமாக ஏற்க மறுக்கிறார்கள். இந்த நிகழ்வு வெள்ளைக்காரன் பொய் சொல்ல மாட்டான் என்பதை ஏற்பதை போல் இருக்கிறது என்று நாராயண மூர்த்தி வேதனையுடன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *