தேவர் ஜெயந்தி முன்னிட்டு இன்று பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 63 வது குருபூஜை விழாவும் 118 வது ஜெயந்தி விழாவும் கொண்டாடப்பட உள்ளது.

இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மதுரை,தேனி, திண்டுக்கல், விருதுநகர் ஆகிய நான்கு மாவட்டங்களை இணைக்கும் மையப் பகுதியில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மற்றும் பி.கே. மூக்கையாத் தேவர் திருவுருவ முழு வெண்கல சிலைகள் அமைந்துள்ளது.
இந்நிலையில் இச்சிலைகளுக்கு உசிலம்பட்டி சுற்றியுள்ள கிராம பொதுமக்கள் மற்றும் உசிலம்பட்டி நகர் பகுதி வணிகர்கள் சங்கத்தினர், கடை வியாபாரிகள் சங்கத்தினர், ஆட்டோ ஓட்டுநர்கள், பூ மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு சங்கத்தினர், பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு சமூக அமைப்பினர் மாலை அணிவித்தும் பால்குடம் எடுத்து வந்து பால் அபிஷேகம் செய்து மரியாதை செலுத்த உள்ளனர்.

மேலும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பி.கே.மூக்கையாத்தேவர் சிலைகளுக்கு மேல் வண்ண விளக்குகளால் அலங்கரித்து அமைக்கப்பட்டும் வண்ண விளக்குகளால் புகைப்படங்களுடன் ஜொலிக்கின்றன. இதனை உசிலம்பட்டி சுற்றியுள்ள இளைஞர்கள் கண்டுரசித்து புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர்.
மேலும் உசிலம்பட்டி டிஎஸ்பி சந்திரசேகரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.













; ?>)
; ?>)
; ?>)