60 வயது பெண்ணிற்கு 90 வயது முதியவர் பாலியல் தொல்லை! கோபத்தில் வீட்டில் இருந்த அரிவாள் வெட்டியதில் முதியவர் பலி! பெண் கைது!
சிவகங்கை அருகே உள்ள மாங்காட்டுப்பட்டியை சேர்ந்தவர் கருப்பையா (வயது 90). அதே பகுதியில் இவர் வீட்டின் அருகில் வசித்து வரும் தமிழரசி (வயது 60). நேற்றைய தினம் தமிழரசி தனது வீட்டில் தனியாக இருந்த நிலையில் முதியவர் கருப்பையா தமிழரசி வீட்டுக்குள் நுழைந்து தமிழரசிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். கோபத்தில் தமிழரசி வீட்டில் இருந்த அரிவாளால் கருப்பையாவின் கையில் வெட்டியுள்ளார். வயது முதிர்வு காரணமாக இரத்தப்போக்கு அதிகமாக உள்ளது. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் கருப்பையா உயிரிழந்து உள்ளார். இதே பெண்ணிற்கு இந்த முதியவர் ஓராண்டுக்கு முன்பு பாலியல் தொல்லை கொடுத்ததாக சொல்லப்படுகின்றது. 90 வயது முதியவர் 60 வயது பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்து, பெண் அவரை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதகுபட்டி காவல்துறை வழக்கு பதிவு செய்து தமிழரசியை கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகிறது. தற்போது கருப்பையாவின் உடல் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறாக வைக்கப்பட்டுள்ளது.
