• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகத்தில் 6 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி

ByA.Tamilselvan

Jan 12, 2023

பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகத்தில் 6 ஆயிரம் பக்தர்கள் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பழனி முருகன் கோவிலில் வருகிற 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி கும்பாபிஷேக திருப்பணிகள் முழுவீச்சில் நடைபெறுகிறது. இந்நிலையில் கும்பாபிஷேகத்துக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம், பழனியாண்டவர் கலைக்கல்லூரியில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், கும்பாபிஷேகத்தின்போது பக்தர்களுக்கான அனுமதி, முன்னேற்பாடு வசதிகள் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. பின்னர், கும்பாபிஷேகத்தில் 6 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுவது எனவும், இதில் கோவில் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் பக்தர்களில் 3 ஆயிரம் பேர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு பங்கேற்க உள்ளனர் என்றும் முடிவு செய்யப்பட்டது.
கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ளும் பக்தர்கள் அன்றைய தினம் அதிகாலை 4 மணி முதல் 7.15 மணி வரை ரோப்கார், மின்இழுவை ரெயில் மற்றும் படிப்பாதை வழியே அனுமதிக்கப்படுவர். பின்னர் கருப்பணகவுண்டன்வலசு அருகே பைபாஸ் சாலையில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கவும், அங்கிருந்து பழனி நகருக்கு வர சிறப்பு பேருந்துகள் இயக்குவது எனவும் முடிவு செய்யப்பட்டது.மேலும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடு பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.