• Fri. Nov 21st, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

யானை தந்தம் விற்பனை செய்ய இருந்த 6 பேர் கைது

ByAnandakumar

Apr 9, 2025

கரூரில், யானை தந்தம் விற்பனை செய்வதற்காக தனியார் விடுதியில் தங்கியிருந்த பெண் உட்பட ஆறு பேர் கைது செய்து, சுமார் 20 லட்ச ரூபாய் மதிப்புள்ள மூன்றரை கிலோ யானை தந்தத்தை வனத்துறை பறிமுதல் செய்தது.

கரூர் மாவட்ட வனத்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி, கரூர் சுங்ககேட் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் நேற்று இரவு, கரூர் மாவட்ட வன அலுவலர் சண்முகம் உத்தரவின் பேரில் வனச்சரக அலுவலர் தண்டபாணி தலைமையில் வனத்துறை பணியாளர்கள் திடீர் சோதனை செய்தனர்.

அப்போது அந்த விடுதியில், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் (25), நந்து (25), திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஜோதிலட்சுமி (45), திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மதியழகன் (46), செந்தில்குமார் (49), முத்துக்குமார் (47) என ஆறு பேரும் யானை தந்தத்தை விற்பனை செய்வதற்காக தங்கியிருந்துள்ளனர்.

ஆறு பேரையும் கைது செய்த வனத்துறை அவர்களிடம் இருந்த சுமார் 20 லட்சம் மதிப்புள்ள 3 1/2 கிலோ யானை தந்தத்தையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு அதன் பிறகு கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.