• Thu. Aug 27th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

6.5 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய நத்தை படிமங்கள் தெலுங்கானாவில் கண்டுபிடிப்பு!…

Byadmin

Aug 6, 2021

தெலுங்கானா ஆசியாபாத் மாவட்டம் ஜின்னெதாரி வனப்பகுதியில் 6.5 கோடி ஆண்டுகள் பழமையான நத்தை காஸ்ட்ரோபாட் படிமங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

தொல் பொருள் மற்றும் பாரம்பரியத்திற்கான பொது ஆராய்ச்சி நிறுவனம் இதை கண்டுபிடித்துள்ளது. இது நத்தை போன்ற பிசா டிர்போலென்சிஸ் என உறுதிபடுத்தியுள்ளனர்.

இந்த பகுதியில் மர புதை படிமங்களின் மாதிரியும் ஆல்காவின் மைக்ரோஃபோசில்களையும் சுண்ணாம்புக் குகைகளையும் கண்டுபிடித்துள்ளனர். எனவே இந்த பகுதியை புதை படிம பூங்காவாக அமைக்க வேண்டும் என்று தொல்லியலாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.