ராஜேஷ் குமார் பிரின்ஸ் தளவாய் சுந்தரம் தாரகைகத்பட் ஆகியோருடன்
நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சரான நாஞ்சில் வின்சென்ட், முன்னாள் அமைச்சர் பச்சைமால், இவர்களுடன் தியாகி. முத்துக்கருப்பன், குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர்
டாக்டர்.பினுலால், குமரி மாவட்ட ஜனதா தளம் தலைவர் வழக்கறிஞர்
அருள்ராஜ்.முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் வழக்கறிஞர்
இராஜகோபால், இவர்களுடன். முகமது இஸ்மாயிலினின் குடும்பத்தாரும் பங்கேற்றனர்.

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக திருச்சி வேலுசாமி பங்கேற்றார்.
முகமது இஸ்மாயில் குமரியின் ஒன்றுபட்ட மாவட்டமாக இருந்த போது. காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவராக இருந்தபோதுதான்.

நாகர்கோவில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த குமரி தந்தை மார்சல் நேசமணி மரணம் அடைந்த நிலையில். 1969_ம் ஆண்டு நாகர்கோவில் நாடாளுமன்றத்திற்கு முதல்
இத்தேர்தல் நடைபெற்றது. பெரும் தலைவர் காமராஜர் இந்த தேர்தலில் போட்டியிட்டு ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
தேர்தல் முடிந்த பின் தேர்தல் சம்பந்தப்பட்ட கணக்குகளை.முகமது இஸ்மாயில் தலைமையிலான குழு ஆய்வு செய்த பேது. கிட்டத்தட்ட (அன்றாய நாளில் பெரும் பணமான) ரூ.90,000.00. மிச்சம் வந்த நிலையில் அந்த பணத்தை முகமது இஸ்மாயில்
தலைவர் காமராஜர் முன்னிலையில் சென்னை காங்கிரஸ் தலைமையகமான
சத்திய மூர்த்தி பவனில். அன்றைய காங்கிரஸ் தலைவர் சி.சுப்பிரமணியதிடம்
ஒப்படைத்ததை. திருச்சி வேலுசாமி நினைவுகூறினார்.

பத்மநாபபுரம் சட்டமன்ற உறுப்பினராக முகமது இஸ்மாயில் இருந்த போது. தக்கலையில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளியை உயர் நிலைப்பள்ளி யாக தரம் உயர்த்த வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் தலைமையில் அப்பகுதி மக்களின் போராட்டம் 60_நாட்கள் தொடர்ந்து நடப்பதை சட்டமன்ற கூட்டத்தில் முகமது இஸ்மாயில் சொன்ன
அன்றைய மாலையே முதல்வர் எம் ஜி ஆர் முகமது இஸ்மாயில் இடம் உங்கள் கோரிக்கை ஏற்கப்படுகிறது. கல்வித் துறை அதிகாரிகள் விரைந்து உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என தெரிவித்ததை. முகமது இஸ்மாயிலின் நினைவு போற்றிய விழாவில் பேச்சாளர்கள் அனைவருமே நினைவுகூர்ந்தார்கள்.
நிகழ்வில் பேசிய தமிழக சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜேஷ் குமார் அவரது பள்ளி பருவத்தில் பொன்னப்பநாடாரும்,முகமது இஸ்மாயில் வீட்டில் சந்தித்து பேசிக்கொண்டதை பார்த்தவன். தலைவர் முகமது இஸ்மாயிலின் 100_வது பிறந்த நாள் இன்னும் இரண்டு ஆண்டுகளில் கொண்டாட இருக்கிறோம்.
தலைவர் முகமது இஸ்மாயில், முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்
ஐயா மகாதேவன் பிள்ளை, முன்னாள் அமைச்சர் லூர்து அம்மாள் சைமன் ஆகியோரது நினைவை போற்றும் வகையில். குமரி மாவட்டத்தில் நினைவு மண்டபம் அரசின் மூலம் அமைப்பதற்கு எல்லா நடவடிக்கையும் மேற்கொள்வேன் என தெரிவித்தார்.

தளவாய் சுந்தரம் அவரது பேச்சில். அம்மா ஜெயலலிதா முகமது இஸ்மாயில் மூலம் அன்றைய பிரதமர் தேவகுவுடா சந்திப்பு குறித்தும். அவரது வாழ்நாள் முழுவதும், அவர் இருந்த இயக்கத்திற்கு உண்மையாக இருந்தார் என தெரிவித்தார்.
நாஞ்சில் வின்சென்ட் முகமது இஸ்மாயில் உடன் நாகர்கோவில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட கால நினைவுகளை பகிர்ந்தார்.







; ?>)
; ?>)
; ?>)