கன்னியாகுமரியில் மின்வாரிய பொறியாளர் சங்கத்தின்.56_வது இரண்டு நாள் மாநில பொதுக்குழு நடைபெற்றது.
அவன் இன்றி ஒரு அணுவும் அசையாது என்ற அன்றைய பழமொழியின், இன்றைய புதிய பதம் மின்சாரம் இன்றி ஒன்றும் நடவாது என்பதை கடந்து அண்மைக்காலத்தில் மின் கட்டண உயர்வு என்பது தொடமலே ஷாக்கடிக்கும் நிலையில், தமிழ்நாடு மின்சார வாரிய பொறியாளர் சங்கத்தின் 56வது பொதுக்குழு இரண்டு நாட்கள் (ஜூன்_22,23) தேதிகளில் கன்னியாகுமரியில் நடைபெற்றது.

தமிழ்நாடு மின்சார வாரிய பணியாளர்களின் பணி பாதுகாப்பு மற்றும் பண பயன்களை உறுதி செய்யும் அரசு உத்தரவாதத்துடன் முத்தரப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்தித் தந்த மாண்புமிகு தமிழக முதல்வர் மற்றும் மின்துறை மாண்புமிகு மின் துறை அமைச்சர் என இரண்டு பேருக்கும் இப்பொதுக்குழு நன்றியை தெரிவித்ததுடன்,
தமிழ் நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தை மூன்று நிறுவனங்களாக பிரித்த பிறகு, தமிழக சட்டசபையில் மின்துறை பொதுத்துறை நிறுவனமாகவே தொடர்ந்து செயல்படும் என்பதை அரசின் கொள்கை முடிவாக அறிவித்ததை வரவேற்று தமிழக முதல்வர் மற்றும் மின்துறை அமைச்சருக்கும் இப்பொதுக்குழு பாராட்டையும் நன்றியினையும் தெரிவிப்பதுடன், மின்சார வாரிய பணியாளர்களின் பணி பாதுகாப்பு மற்றும் பண பயன்களை உறுதி செய்யும் தமிழக அரசு உத்தரவாதத்துடன் முத்தரப்பு ஒப்பந்தம் ஏற்பட முனைப்புடன் செயல்பட்ட மரியாதைக்குரிய மின்வாரிய தலைவர் அவர்களுக்கும், மின்வாரிய செயலாளர்,இயக்குனர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவருக்கும் இந்த பொதுக்குழு நன்றியை தெரிவிக்கிறது.

தமிழ்நாடு மின்வாரியத்தில் காலியாக உள்ள 2500_க்கும் மேற்பட்ட தொழில் நுட்ப உதவியாளர்கள் பணியிடங்களை(துவக்க நிலை பதவி) பட்டயம் படித்த பொறியாளர்களை கொண்டு உடனடியாக நேரடி நியமனம் செய்திட நடவடிக்கைகள் மேற்கொள்ள வாரியத்தின்.கன்னியாகுமரியில் கூடியுள்ள 56_வது மாநில பொதுக்குழு கேட்டுக் கொள்வதாக, தமிழ் நாடு மின்சார வாரிய பொறியாளர் சங்கம் கேட்டுக் கொள்வதாக,சங்கத்தின் பொதுச்செயலாளர் பொறியாளர் வி.எஸ். சம்பத்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
