• Sat. Dec 13th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

அதிகாலையில் துயரம்- கவுதமலாவில் பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து 51 பேர் பலி

ByP.Kavitha Kumar

Feb 11, 2025

கவுதமலாவில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளான சம்பவத்தில் 51 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்

மத்திய அமெரிக்க நாடான பேருந்து அதிகாலையில் எல் ப்ரோக்ரெசோவில் உள்ள சான் அகஸ்டின் அகாசாகுவாஸ்ட்லான் நகரத்திலிருந்து கவுதமாலா நகரத்திற்கு வடகிழக்கில் சுமார் 90 கிலோமீட்டர் தொலைவில் சென்று கொண்டிருந்தது.

பாலத்தின் மீது சென்றுகொண்டிருந்த பேருந்து திடீரென சாலையோர தடுப்பின் மீது மோதி கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் விழுந்தது. இதனால் பேருந்தில் இருந்த 70-க்கும் மேற்பட்டவர்கள் இடிபாடுகளில் சிக்கியதில் 51 பேர் உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டதாக மீட்புக்குழு தெரிவித்துள்ளது.

இந்த விபத்து குறித்து கவுதமலா அதிபர் பெர்னார்டோ அரேவலோ, மூன்று நாட்கள் தேசிய துக்கத்தை அறிவித்து, மீட்பு முயற்சிகளுக்கு உதவ நாட்டின் ராணுவம் மற்றும் பேரிடர் நிறுவனத்தை நியமித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுடன் நாங்கள் இருக்கிறோம். அவர்களின் வலி எனது வலி,” என்று கூறினார்.

இந்த விபத்து குறித்து தகவல் தொடர்பு அமைச்சர் மிகுவல் ஏஞ்சல் டயஸ் கூறுகையில், “பேருந்து 30 ஆண்டுகள் பழமையானது என்றாலும், அதற்கு இன்னும் இயக்க உரிமம் இருப்பது ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது. அதிகாலை நடைபெற்ற இந்த விபத்துக்கு அதிக பயணிகள் ஏற்றப்பட்டிருந்ததுதான் காரணமா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளார்.