• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

501-பெண்கள் பால்குடம் எடுத்து ஊர்வலம்..,

ByS.MOHAMED RIYAS

Apr 19, 2025

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் எடப்பாடி தலைமையில் அதிமுக ஆட்சி அமைய வேண்டி 501 பெண்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர்.
பழனி மலை அடிவாரத்தில் இருந்து 500 க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக மாரியம்மன் கோவிலுக்கு சென்றனர்.

மேளதாளத்துடன் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற பெண்கள் மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டனர். கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனைகளும் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பெண்கள் அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து சாமி தரிசனம் செய்ய வந்தவர்களுக்கு அதிமுக பழனி நகர் மன்ற உறுப்பினர் நடராஜ் அன்னதானம் வழங்கினார் . இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வேணுகோபால் ,பழனி நகர செயலாளர் முருகானந்தம், அதிமுக நிர்வாகிகள் சதீஷ், அன்வர்தீன், குகன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர் . சித்திரை மாதம் முதல் வெள்ளிக்கிழமை அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.