• Fri. Apr 19th, 2024

50% இடஒதுக்கீடு உத்தரவு வரவேற்கத்தக்கது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

சூப்பர் ஸ்பெசாலிட்டி, டிப்ளமோ போன்ற மருத்துவ படிப்புகளுக்கு சேருவதற்கு அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களாக பணிபுரியும் மருத்துவர்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் கடந்த 2020ஆம் ஆண்டு அரசு அரசாணையை பிறப்பித்தது.
இந்த அரசாணைக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த நீதிமன்றம் அரசாணை செல்லும் என உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சில மருத்துவர்கள் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் அரசு மருத்துவர்களுக்கான 50% இட ஒதுக்கீடு வழங்கும் தமிழ்நாடு அரசின் அரசாணை செல்லும் என உச்சநீதிமன்ற நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கியது.

இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின், சமூக 50% இட ஒதுக்கீடு தீர்ப்பை வரவேற்பதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் தெரிவித்த கருத்தில், நீதியைப் பாதுகாக்க உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு மகத்தானது. மருத்துவ மாணவர்கள் இழந்த உரிமை 5 ஆண்டுகளுக்குப் பின் திமுக ஆட்சியினால் கிடைக்கப்பெற்றுள்ளது. கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவை பறிக்கும் நீட் போராட்டத்திலும் சமூகநீதி நிச்சயம் வெல்லும். நீட் தேர்வு போராட்டத்தில் வெற்றிபெற திமுக அரசு தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தும்.

சமூகநீதியை மதிக்காத பாஜக அரசுக்கு பதிலாக சமூக நீதியை காக்க உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு மகத்தானது. உச்சநீதிமன்ற தீர்ப்பு திமுக பொறுப்பேற்ற பிறகு சமூக நீதி வரலாற்றில் கிடைத்துள்ள 2-வது மிகப்பெரிய வெற்றி என தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *