தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தாமரைக்குளம் கரட்டில் வெங்கடாஜலபதி திருக்கோவில் உள்ளது. இந்த கோயில் 700 வருடங்களைக் கொண்ட பழமையான கோயில் ஆகும்.

இந்த கோயில் அருகே மாற்று மதத்தைச் சேர்ந்தவர்கள் தர்ஹாவில் இறைச்சி விருந்து வழங்குவதாக கூறப்படுகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோயில் நிர்வாகி செல்வி அம்மா மற்றும் இந்து முன்னணி மாவட்டத் தலைவர் முருகன், பொதுச் செயலர் உமயாள்ராஜ், பாஜக மாவட்டத் தலைவர் ராஜபாண்டி தலைமையில் வாய் மற்றும் கண்களில் கருப்புத் துணியை கட்டி போராட்டத்தில் ஈடுபட முயற்சித்தனர்.
அவர்களுக்கு காவலர்கள் அனுமதி வழங்கவில்லை. அதன் பின் அவர்கள் கரட்டின் மேல் உள்ள வெங்கடாஜலபதி திருக்கோயில் வழிபாடு செய்ய புறப்பட்டனர்.
அப்போது, அவர்களுக்கு அனுமதி இல்லை எனக் கூற 14 பெண்கள் உள்பட 50 பேரை போலீஸார் கைது செய்து, தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.