• Tue. Sep 23rd, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

கஞ்சா போதையில் சிறுவன் உள்பட 5 பேருக்கு அரிவாள் வெட்டு.., தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய கோரி, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சாலை மறியல்…

ByKalamegam Viswanathan

Nov 28, 2023

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா பெருங்குடி சங்கையா கோவில் தெருவை சேர்ந்தவர் பெரியசாமி வயது 50. இவரது பேரன் சர்வின் (வயது 6) என்பவருக்கு உடல் நலம் சரியில்லாத காரணத்தினால் மருத்துவமனைக்கு செல்லும்போது இதே பெருங்குடியைச் சேர்ந்த மாரி, சசிகுமார் ஆகிய இருவரும் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. போதையில் இருந்த மாரி. சசி இருவரும் கண்ணன் என்பவரை தேடி வந்த தகவல் கூறப்படுகிறது.

இந்நிலையில் மாரி. சசி இருவரும் ஆபாசமாக பேசியதாக கூறப்படுவது, பெரியசாமி ஏன் இங்கு வந்து ஆபாசமாக பேசுகிறாய் என்று கூறினார். இதனை எடுத்து ஆத்திரமடைந்த மாரி. சசி இருவரும் கத்தியால் தாக்கியதில் சிறுவன் சர்வேஷஷிற்க்கு பலத்த வெட்டு விழுந்துள்ளது.

அதைத் தொடர்ந்து பெரியசாமியையும் தாக்கி உள்ளார். மேலும் அதே பகுதியை சேர்ந்த கணபதி( வயது 26), விஜயகுமார் (வயது 27), அஜித் (வயது 28) ஆகிய ஐந்து பேருக்கும் கத்தியால் வெட்டியதில் பலத்த காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் ஜாதி பெயரை கூறி தாக்குதல் நடத்தியதால் ஆத்திரமடைந்த சங்கையா கோவில் தெரு மக்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தெற்கு மாவட்ட செயலாளர் காளிமுத்து, கிழக்கு மாவட்ட செயலாளர் அரசமுத்து பாண்டியன் பாண்டியம்மாள் உள்ளிட்ட 80 பேர் அம்பேத்கர் சிலை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து தகவல் அறிந்து வந்த மதுரை தெற்கு வாசல் காவல் உதவி ஆணையர் ராமகிருஷ்ணன், திருமங்கலம் காவல் உதவி கண்காணிப்பாளர் வசந்த், அவனியாபுரம் காவல் ஆய்வாளர் பார்த்திபன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி சாலை மறியல் ஈடுபட்டவர்களை கலைந்து போக செய்தனர். அதனால் விமான நிலையம் பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.