• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மதுரை விமானநிலையத்தில் பெண் பயணியிடம் 458 கிராம் தங்கம் பறிமுதல்..!

ByKalamegam Viswanathan

Nov 11, 2023

துபாயில் இருந்து மதுரை விமான நிலையம் வந்த ஸ்பைஜெட் விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக சுங்க இலாக்கா நுண்ணறிவு பிரிவினருக்கு தகவல் கிடைத்ததன் பேரில் துபாயில் இருந்து மதுரை வந்த பயணிகளை சோதனை மேற்கொண்டனர்.
துபாயில் இருந்து மதுரை வந்த திருச்சி, பாலக்கரை பகுதியைச் சேர்ந்த மணிவேல் மனைவி கீதா (42) என்பவர் அணிந்திருந்த உடையில் பேஸ்ட் வடிவிலான தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் 27,86,930 லட்சம் மதிப்பில் 458 கிராம் எடையுள்ள தங்கம் என தெரிய வந்தது. இதனைப் பறிமுதல் செய்து தொடர்ந்து பெண் பயணிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..