• Fri. Sep 12th, 2025
WhatsAppImage2025-08-28at1013221
WhatsAppImage2025-08-28at101324
WhatsAppImage2025-08-28at1013171
WhatsAppImage2025-08-28at101323
WhatsAppImage2025-08-28at101320
WhatsAppImage2025-08-28at101321
WhatsAppImage2025-08-28at101322
WhatsAppImage2025-08-28at101317
WhatsAppImage2025-08-28at1013191
previous arrow
next arrow
Read Now

41 ஆண்டுகள் பழமையான திருமண கேக் ஏலத்தில் விற்பனை!

ByA.Tamilselvan

Oct 20, 2022

டயானா திருமணத்தின் போது தயாரிக்கப்பட்ட 41 ஆண்டுகள் பழமையான கேக் எலத்தில் விறபனை செய்யப்படுகிறது.
இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தின் மறைவுக்கு பின் அரசரான 3-ம் சார்லஸ் மற்றும் இளவரசி டயானா இருவருக்கும் 1981-ம் ஆண்டு ஜூலை 29-ம் தேதி திருமணம் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த அரச குடும்ப திருமணத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் ஒருவர் நைஜல் ரிக்கட்ஸ். கடந்த ஆண்டு நைஜல் காலமானார்.
அவர், இந்த திருமணத்தின்போது தயாரிக்கப்பட்ட 41 ஆண்டுகள் பழமையான திருமண கேக்கின் ஒரு பகுதியை பாதுகாத்து வைத்திருக்கிறார். அதனை தற்போது ஏலத்திற்கு விட முடிவு செய்துள்ளனர் என நியூயார்க் போஸ்ட் செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது.
அதன்படி, இங்கிலாந்தில் டோர் மற்றும் ரீஸ் ஏல அமைப்பு சார்பில் இந்த கேக் ஏலத்திற்கு விடப்படும். கேக் துண்டின் ஏல மதிப்பு 300 பவுண்டு என அறிவிக்கப்பட்டு உள்ளது. இது இந்திய மதிப்பில் ரூ.27 ஆயிரத்திற்கும் கூடுதலானது. இதனை விட அதிக தொகைக்கு ஏலத்திற்கு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திருமணத்திற்காக 23 கேக்குகள் அப்போது தயாரிக்கப்பட்டு உள்ளன. அவற்றில் பழகேக் ஒன்றின் மைய பகுதியில் இருந்து இந்த கேக் துண்டு வெட்டி எடுக்கப்பட்டிருக்க வேண்டும். அந்த கேக் 5 அடுக்குகளாக 5 அடி உயரம் கொண்டது. இதேபோன்ற மற்றொரு கேக் துண்டு கடந்த 2014-ம் ஆண்டில் 1,375 பவுண்டு மதிப்புக்கு, இந்திய மதிப்பில் ரூ.1.27 லட்சம் (தற்போதுள்ள மதிப்பு) அளவுக்கு ஏலம் எடுக்கப்பட்டது.