• Tue. May 30th, 2023

ரோட்டரி பவுண்டேஷன் மூலம் 400 மில்லியன் டாலர் சேவை திட்டங்களுக்கு உதவப்படும்

Byp Kumar

Apr 21, 2023

ரோட்டரி உலகத் தலைவர் கார்டன் மெக்கினலி பேட்டி ரோட்டரி பவுண்டேஷன் மூலம் 400 மில்லியன் டாலர் தொகை பல சேவை திட்டங்களுக்கு செயற்படுத்தப்பட உள்ளது என்று ரோட்டரி உலகத் தலைவர் கார்டன் மெக்கினலி கூறினார்.
இது பற்றிய விவரம் வருமாறு. சர்வதேச ரோட்டரி இன் தலைவர் கார்டன் மெக்கனரி நேற்று மதுரை வந்தார் மதுரையில் ரோட்டரி தலைவர்களுக்கான சந்திப்பு நிகழ்ச்சி வேலம்மாள் ஐடாஸ் கட்டர் அரங்கில் நடைபெற்றது இந்நிகழ்வில் 1500 க்கும் மேற்பட்ட ரோட்டரி உறுப்பினர்கள் பங்கேற்றனர் இந்நிகழ்வில் இதன் ஏற்பாடுகளை ரோட்டரி பன்னாட்டு இயக்குனர் ஏ எஸ் வெங்கடேஷ் ரோட்டரி முன்னாள் ஆளுநர் மற்றும் மண்டலம் 5 பப்ளிக் இமேஜ் ஒருங்கிணைப்பாளரும் இந்நிகழ்விற்கான தலைவருமான எம் முருகானந்தம் ஆகியோர் செய்திருந்தனர். இந்நிகழ்வில் ரோட்டரி மாவட்டங்கள் 2981 2982 3000 3203 3212 மாவட்டங்களைச் சார்ந்த ஆளுநர்கள் முன்னாள் ஆளுநர்கள் பங்கேற்றனர் ரோட்டரி உலகத் தலைவர் உலகளாவிய சேவை அமைப்பான ரோட்டரி இயக்கத்தின் 2023 24 ஆம் ஆண்டிற்கான தலைவர் கார்டன் மெக்கினலி இவ்விழாவில் பங்கேற்றார். இன்று மதுரை தாஜ் ஹோட்டலில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது 2023 -2024 ஆண்டில் மன ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளித்தல் பெண்கள் முன்னேற்றம் பெண்களின் ஆரோக்கியம் நல்வாழ்வு கல்வி மற்றும் பொருளாதார பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான வழிகளை கண்டறிந்து பெண்கள் முன்னேற்றத்திற்கு உலக அளவில் உழைத்தல் போன்ற திட்டங்களை செயல் படுத்த உள்ளோம்.
1985 ஆம் ஆண்டில் ரோட்டரி போலியோ பிளஸ் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இது குழந்தைகளுக்கு பெருமளவில் தடுப்பூசி மூலம் உலகளாவிய போலியோ ஒழிப்பை சமாளிக்கும் முதல் முயற்சியாக இருந்தது. 122 நாடுகளில் 3 பில்லியனுக்கும் அதிகமான குழந்தைகளுக்கு தடுப்பூசி போட 2 பில்லியன் டாலருக்கு அதிகமான நிதியும் எண்ணற்ற தன்னார்வ மணி நேரமும் பங்களித்துள்ளது.இந்த முயற்சிக்கு 10 பில்லியன் டாலருக்கும் அதிகமான பங்களிப்பு வழங்குவதற்கான தன்னார்வ நன்கொடையாளர்கள் அரசாங்கங்களின் முடிவுகளில் ரோட்டரி இயக்கத்தின் முயற்சிகள் பெரும் பங்கு வகிக்கின்றன. உலகளாவிய போலியோ ஒழிப்பு முன் பயிற்சியில் ரோட்டரி இயக்கத்தில் கவனம் நிதி திரட்டுதல் தன்னார்வ ஆட்சேர்ப்பு மற்றும் விழிப்புணர்வை உருவாக்குதல் ஆகியவற்றில் உள்ளது.

போலியோவை ஒழிப்பின் விளிம்பிற்கு கொண்டு வருவதில் பல சகாப்த கால அனுபவங்களை திரட்டி உலகங்களும் உள்ள ரோட்டரி உறுப்பினர்கள் கோவிட் 19 மற்றும் தடுப்பூசி பற்றிய உயிர்காக்கும் தகவல்களை மக்களுக்கு தெரிவிக்கிறார்கள். ரோட்டரி அறக்கட்டளையின் பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து உக்ரைன் அகதிகளுக்கு உதவிகள் வழங்கப்பட்டன. 1905 இல் ஆரம்பிக்கப்பட்ட ரோட்டரி இயக்கத்தில் உலகம் முழுக்க 1.4 மில்லியன் (14 லட்சம்) உறுப்பினர்கள் உள்ளனர்.
இந்தியாவில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் உறுப்பினர்கள் உள்ளனர். ரோட்டரி 200 நாடுகளில் தன்னுடைய சேவை திட்டத்தை செயல் படுத்தி வருகிறது. உலக ரோட்டரி அமைப்பின் 2023.24 ஆம் ஆண்டிற்கான முக்கியத்துவமான திட்டம் மன ஆரோக்கியம்.இந்தியா முழுவதும் மனநல திட்டங்கள் செயற்படுத்தும் சேவையில் உள்ளோம். எல்லா நாட்டிலும் ஒவ்வொரு விதமான மன அழுத்தம் உள்ளது. அந்தந்த நாடுகளுக்கு ஏற்ப மனநல திட்டம் செயற்படுத்தப்படும். மன நோயாளிகளை மக்கள் பார்க்கும் விதத்தை மாற்றுவோம். ரோட்டரி போலியோ ஒழிப்பிற்கு உலகம் முழுவதும் பல்வேறு திட்டங்களை செயற்படுத்தி உள்ளது. உலகம் முழுவதும் போலியோ ஒழிக்கப்பட்டு இருக்கிறது ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் போலியோ உள்ளது. அதையும் ரோட்டரி 0% சதவீதமாக மாற்றும். 400 மில்லியன் டாலர் ரோட்டரி பவுண்டேசன் மூலம் 400 மில்லியன் டாலர் பல சேவை திட்டங்களுக்கு செயற்படுத்தப்பட உள்ளது. இந்தியாவிற்கு நான் முதல்முறையாக வந்துள்ளேன். மிகவும் சந்தோஷமாக உள்ளது. இந்தியா மிகத் துடிப்போடு செயல்பட்டுக் கொண்டிருக்கிற ஒரு அற்புதமான நாடு. நான் மிகவும் மதிக்கக்கூடிய மாமனிதர் மகாத்மா காந்தி. மகாத்மா காந்தி போல ஒவ்வொருவரும் சேவையாற்ற வேண்டும். சென்னை இன்ஸ்டிட்யூட் ஆஃப் மென்டல் ஹெல்த் எக்மோரில் உள்ளது. ஒரு கோடி செலவில் சிறப்பாக அது சீரமைக்கப்பட உள்ளது. இவ்வாறு ரோட்டரி இன்டர்நேஷனல் தலைவர் கார்டன் மெக்கனலி பேட்டியின் போது தெரிவித்தார்.ரோட்டரி முன்னாள் ஆளுநர் மற்றும் ரோட்டரி மண்டலம் 5 பப்ளிக் இமேஜ் ஒருங்கிணைப்பாளர் எம். முருகானந்தம் ரோட்டரி பன்னாட்டு ஒருங்கிணைப்பாளர் ஏ.எஸ் வெங்கடேஷ் முன்னாள் ஆளுநர் குமணன் 3000 மாவட்ட 24.25 ஆண்டுக்கான ஆளுநர் ராஜா கோவிந்தசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *