• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மதுரையில் வ.உ.சிதம்பரனார்க்கு 40 அடி உயர சிலை

Byகுமார்

Dec 5, 2021

மதுரையில் முதன்முதலாக வ உ சிதம்பரனார்க்கு 40 அடி உயர சிலை அமைக்கப்படும் என அனைத்து பிள்ளைமார் மகாசபை நிறுவனர் ஆறுமுகம் பிள்ளை பேட்டி அளித்துள்ளார்.

மதுரையில் விரகனூர் சுற்றுச்சாலை மத்தியப் பகுதியில் வ உ சிதம்பரனார் சிலை அமைக்க மாவட்ட நிர்வாகத்திடம் அனைத்து பிள்ளைமார் மகாசபை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இந்த கோரிக்கையை பரிசீலித்த மாவட்ட ஆட்சியர் சிலையை அமைக்க நில அளவை செய்ய உத்தரவிட்டிருந்தார்.

அதனடிப்படையில் இன்று வருவாய்த்துறையினர் விரகனூர் சுற்றுச்சாலை பகுதியில் மையப்பகுதியில் நில அளவிடும் பணி நடைபெற்றது. இந்த பணியின் போது அனைத்து பிள்ளைமார் மகாசபை நிறுவனர் ஆறுமுகம் பிள்ளை மற்றும் முக்கிய நிர்வாகிகள் நில அளவை பணியினை பார்வையிட்டனர்.

பின்னர் அனைத்து பிள்ளைமார் மகாசபை நிறுவனர் ஆறுமுகம் பிள்ளை செய்தியாளரிடம் கூறியது, மதுரை விரகனூர் சுற்றுச்சாலை மையப்பகுதியில் முதன்முதலாக வ.உ.சிதம்பரனார்க்கு 40 அடி உயர சிலை அமைக்கப்படும் எனவும் இந்த சிலை திறப்பு விழாவிற்கு பாரதப் பிரதமர் மோடி ஜி மற்றும் அமித்ஷா முக்கிய அமைச்சர்கள் தொழிலதிபர்கள் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்வார்கள் எனக் கூறினார்