• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

வழிப்பறியில் கொள்ளைக்கு திட்டமிட்ட 4 பேர் கைது

ByKalamegam Viswanathan

May 29, 2023

பரம்புபட்டி தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் வழிப்பறியில் கொள்ளை சம்பவம் நடத்த திட்டமிட்ட நான்கு வாலிபர்கள் கையும் களவுமாக பிடித்த போலீசார்.
மதுரை வலையங்குளம் பகுதியை சேர்ந்த வேல்முருகன், ஆனந்த், ரூபன் ராஜ், மாரி ராஜா ஆகியோர் அறிவால் மற்றும் உருட்டு கம்புகளுடன் தாயார் நிலையில் பரப்புபட்டி நெடுஞ்சாலை பகுதி முன்புதரில் மறைந்துள்ளனர்.

அப்பொழுது பெருங்குடி காவல் நிலைய சார்பாக ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் காவலர்கள் உதவியுடன் நான்கு வாலிபர்களையும் பிடித்து விசாரணை மேற்கொண்டதில் சாலையில் செல்லும் நபர்களை வழிமறித்து வழிப்பறியில் ஈடுபட முயன்றது தெரியவந்தது.
அவர்களிடம் பயங்கரமான அரிவாள் மற்றும் உருட்டு கம்புகள் இருந்துள்ளது, உடனடியாக போலீசார் நான்கு வாலிபர்களையும் கைது செய்து அவர்களிடம் இருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்து வேல்முருகன், ஆனந்த், ரூபன் ராஜ், மாரி ராஜா ஆகிய நான்கு நபர்களை மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர். பெருங்குடி காவல் நிலைய போலீசார் முன்கூட்டியே வழிப்பறி கொள்ளையர்களை பிடித்ததற்கு மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவ பிரசாத் யாதவ் வெகுவாக பாராட்டியுள்ளார்.