குமரி கேரளா எல்லை பகுதியான ஆறாட்டுகுழியில் வைத்து புலிப்பல் மற்றும் யானை தந்தங்களை கடத்தி விற்பனை செய்ய முயன்ற கும்பலை வனத்துறை அதிகாரிகள் நேற்று கைது செய்துள்ளனர்.

இந்த கடத்தல் தொடர்பாக குமரி மாவட்டம் பேச்சிப்பாறை மற்றும் மோதிரமலையைச் சேர்ந்த ஷாஜகான் மற்றும் விஷம்பரன், குட்டப்பன், நாகப்பன் உட்பட நான்கு பேரை வனத்துறை விசாரனை நடத்தி வருகின்றனர்.மேலும் புலிப்பல்,யானை தந்தங்களும் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.