
உத்தர பிரதேச மாநில சட்டப்பேரவைக்கான 3-ம் கட்ட வாக்குப்பதிவு துவங்கியது.
உத்தர பிரதேச மாநில சட்டப்பேரவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது.
இரண்டு கட்ட தேர்தல்கள் முடிவடைந்த நிலையில் 3 ஆம் கட்டமாக 16 மாவட்டங்களை உள்ளடக்கிய 59 சட்டமன்ற தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு தொடங்கியது.மூன்றாம் கட்ட தேர்தலில் 627 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
1.16 கோடி ஆண் வாக்காளர்கள், 99.6 லட்சத்திற்கும் அதிகமான பெண் வாக்காளர்கள் மற்றும் 1,096 மூன்றாம் பாலினத்தவர் என 2.15 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். இதற்காக 15,553 மையங்களில் 25,741 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
சில மாவட்டங்களில், பதற்றமான வாக்குச்சாவடிகள் அதிகம் நிறைந்திருப்பதால் 55 கம்பெனி துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்
காலை 7 மணிக்கு துவங்கிய மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது. சமாஜ்வாதி கட்சி தலைவரும், அம்மாநில முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ், எதிர்த்து போட்டியிடும் பாஜக வேட்பாளரும் மத்திய அமைச்சர் எஸ்பி சிங் பாகேல் மற்றும் லோஹியா சமாஜ்வாதி கட்சி தலைவருமான ஷிவ்பால் சிங் யாதவ் உள்ளிட்ட வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான சல்மான் குர்ஷித் மற்றும் அவரது மனைவியும் ஃபரூகாபாத் தொகுதி வேட்பாளருமான லூயிஸ் குர்ஷித் ஆகியோர் காலையில் வாக்களித்தனர்.