• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டில் புள்ளிவிவரம்… 10 வருடமாக கோரிக்கை – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி..!

ByKalamegam Viswanathan

Sep 20, 2023

பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டில் புள்ளிவிவரம் எடுக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். 10 வருடமாக அந்தக் கோரிக்கை வைத்து வருகிறோம். அதை எப்போது செய்யப் போகிறார்கள் என்று தெளிவு இல்லை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி..,

மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது ,பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு குறித்த கேள்விக்கு,

அது கொண்டு வருவது போல் தெரியவில்லை. புள்ளிவிவரம் எடுக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். 10 வருடமாக அந்தக் கோரிக்கை வைத்து வருகிறோம். அதை எப்போது செய்யப் போகிறார்கள் என்று தெளிவு இல்லை.

காவிரி விவகாரம் குறித்த கேள்விக்கு, சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் கேளுங்கள்.

விஸ்வகர்மா திட்டம் குறித்த கேள்விக்கு, அதை எதிர்த்து இருக்கிறோம்.

தமிழகத்தில் தீண்டாமை அதிகமாக இருப்பதாக கவர்னர் கூறியது குறித்த கேள்விக்கு,

அதற்குத்தான் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று சொல்கிறோம். சாதிய வேறுபாடுகள் இருக்கக் கூடாது. சனாதனத்தை ஒழித்தால் தீண்டாமை ஒழிந்து விடுமா என்ற கேள்விக்கு, நான் நம்புகிறேன் நீங்கள் நம்பவில்லையா நம்புங்கள்.