• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

துபாயில் இருந்து மதுரை வந்த விமான பயணிடமிருந்து 21 லட்சம் மதிப்பீட்டில் 322 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல்:

ByN.Ravi

Mar 14, 2024

துபாயிலிருந்து மதுரை விமான நிலையத்திற்கு தங்கம் கடத்தி வருவதாக சுங்க இலக்கா நுண்ணறிவு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், துபாயில் இருந்து மதுரை வந்த ஸ்பைஸ் ஜெட் விமானத்தை, மதுரை விமான நிலைய சுங்க இலக்கா நுண்ணறிவு பிரிவினர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, துபாயில் இருந்து வந்த ஆண் பயணியிடம் அவரது உடமைக்குள் மறைத்து வைத்திருந்த 21 லட்சத்து 31 ஆயிரத்து 640 ரூபாய் மதிப்பிலான 322 கிராம் தங்கம் கடத்தி
வரப்பட்டது தெரியவந்தது.

சுங்க இலாகாவின் நுண்ணறிவு பிரிவினர் விசாரணையில், திருச்சி மாவட்டம் சரபண்டார ராஜன் பட்டடினத்தை சேர்ந்த பர்னஸ் அகமது பிலால் (வயது 26) என தெரியவந்தது. இதனை தொடர்ந்து, கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினர் பர்னஸ் அகமது பிலால் என்ற பயணிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.