மதுரை விமான நிலையத்திற்கு சட்டவிரோத பொருட்களை கடத்தி வருவதாக சுங்க இலாகா வான் நுண்ணறிவு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பெயரில் இன்று மதியம் 2:41 மணி அளவில் கொழும்புவில் இருந்து மதுரையை வந்த ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த பயணிகளை சோதனை மேற்கொண்டனர்.


அந்த விமானத்தில் மலேசிய நாட்டை சேர்ந்த பெண் பயணியின் உடைமைகள் கொண்டுவரும் பையில் 3101 சிகப்பு காதுகள் கொண்ட ஆமை கோலாலம்பூரில் இருந்து கடத்திவரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்திய வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஆமைக குஞ்சுளை பறிமுதல் செய்து மலேசிய பெண் பயணியை கைது செய்தனர்.





