பழனி கோட்டைமேட்டு தெருவை சேர்ந்த சதாம் உசேன் என்பவரின் மூன்று வயது குழந்தை முகமது ரியான். முகமது ரியான் தனது வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த தெரு நாய் முகமது ரியனை கடித்து காயப்படுத்தியது.

முகமது ரியானின் அலறல் சத்தம் கேட்டு அந்தப் பகுதியில் இருந்து வந்தவர்கள் நாய்களை விரட்டி குழந்தையை காப்பாற்றியுள்ளனர். நாய் கடித்ததில் குழந்தை முகமது ரியானுக்கு முகம் மற்றும் காது பகுதியில் காயம் ஏற்பட்டு இரத்தம் சொட்ட துவங்கியுள்ளது. உடனடியாக குழந்தையை மீட்டு பழனி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.
மருத்துவமனையில் குழந்தைக்கு தேவையான சிகிச்சைகள் மருத்துவர்களால் அளிக்கப்பட்டு வருகிறது. பழனி பகுதியில் அடிக்கடி தெரு நாய்கள் சாலையில் செல்பவர்களையும், வாகனத்தில் செல்பவர்களையும் விரட்டிச் சென்று கடிக்கும் சம்பவங்கள் நடைபெறுவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.