• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

கோவை பேரூர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி கோவில் திருவிழாவில் நகை திருடிய 3 பெண்களை கைது

BySeenu

Feb 24, 2024

கோவை கோனியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு கூட்ட நெரிசலை பயன்படுத்தி நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபடுபவர்களை பிடிப்பதற்காக
மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின்படி தெற்கு பகுதி துணை கமிஷனர் சரவணக்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் ருவந்திகா சப்- இன்ஸ்பெக்டர்கள் மாரிமுத்து, உமா, மஞ்சுளா, தலைமை காவலர்கள் கார்த்தி, பூபதி உள்ளிட்டோர் கொண்ட தனிப்படை போலீசார் உக்கடம், பெரிய கடை வீதி, குனியமுத்தூர் கோனியம்மன் கோவில் சுற்று வட்டார பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர். அதில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்ற 3 பெண்களை பிடித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மந்தி தோப்பு பார்வதி (35) பேரூர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்து கோனியம்மன் கோவில் தேர் திருவிழாவை குறிவைத்து கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்களிடம் நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட இருந்தது வந்தது.
இதே போல் கிணத்துக்கடவை சேர்ந்த முத்துமாரி (28), அதே பகுதியை சேர்ந்த ஆர்த்தி (26) சொந்த ஊர் மதுரை. கடந்த ஒரு வாரத்தில் பல பெண்களிடம் நகை பறித்தது தெரியவந்தது. இவர்களிடம் இருந்து 20 பவுன் நகை பறிமுதல் செய்தனர்.