விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே விஜய கரிசல் குளம் கிழக்கு தெருவை சேர்ந்த பொன்னுபாண்டியன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் அனுமதி இன்றி சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்து வந்துள்ளனர்.

அப்போது திடீரென ஏற்பட்ட மின்சார உராய்வின் காரணமாக பட்டாசுகள் வெடித்து சிதறி உள்ளன. இந்த வவெடி விபத்தில் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த கீழகோதை நாச்சியாபுரம் பகுதியைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன்(21), விஜய கரிசல்குளம் பகுதியைச் சேர்ந்த முத்துலட்சுமி (70), சண்முகத்தாய் (60) ஆகிய இரண்டு பெண் உட்பட்ட மூன்று பேர் பலியான நிலையில் மாரியம்மாள் வயது 55 என்ற ஒரு பெண் படுகாயம் அடைந்துள்ளார். படுகாயம் அடைந்த நபரை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் கொண்டு சேர்த்துள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த வெம்பக்கோட்டை தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

பலியான மூன்று பேரின் உடல்களை கைப்பற்றி சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் மேலும் படுகாயம் அடைந்த ஒருவர் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சட்டவிரோதமாக வீட்டில் பட்டாசு தயாரிப்பு பணி நடைபெற்று வந்த நிலையில் இது குறித்து வருவாய் துறையினர் மற்றும் வெம்பக்கோட்டை காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீட்டின் உரிமையாளர் பொன்னு பாண்டியன் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டாரா அல்லது வேறு யாரேனும் இந்த வீட்டில் வைத்து பட்டாசு தயாரிப்பு பணி நடைபெற்றதா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.