• Mon. Jun 24th, 2024

கோவையில் தனிஷ்க் நிறுவனம் சார்பில் 3-நாள் ‘வைர நகை மற்றும் விற்பனை கண்காட்சி’

BySeenu

Jun 16, 2024

இந்தியாவின் மிகப் பெரிய சில்லறை நகை விற்பனை பிராண்டான, டாடா குழுமத்தைச் சேர்ந்த ‘தனிஷ்க்’ நிறுவனம் சார்பில் பிரத்தியேக திருமண வைர நகைகள் கண்காட்சி மற்றும் விற்பனை நிகழ்வு கோவை ரேஸ் கோர்ஸ் சாலையில் அமைந்துள்ள ITC ஹோட்டல்ஸ் குழுமத்தின் கீழ் இயங்கும் வெல்கம் ஹோட்டலில் துவங்கியது.

இந்த நிகழ்வை தனிஷ்க் நிறுவனத்தின் அதிகாரிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் துவக்கி வைத்தனர்.

இதையொட்டி செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. தனிஷ்க் நிறுவனத்தின் சார்பில் அதன் மெர்ச்சண்ட் மேலாளர் ரவிகாந்த், சர்க்கிள் வர்த்தக மேலாளர் சந்திரசேகர், கிளஸ்டர் மேலாளர் சந்தோஷ் மற்றும் ஏரியா வர்த்தக மேலாளர் வினீத் ஆகியோர் செய்தியாளர்களை
சந்தித்தனர்.

இந்த நிகழ்வு பற்றி அவர்கள் கூறுகையில்:-

இந்த பிரத்தியேக திருமண வைர நகைகள் கண்காட்சி மற்றும் விற்பனை நிகழ்வு சனிக்கிழமை முதல் திங்கள் வரை (15.6.2024-17.6.2024) நடைபெறும். இதில் ரூ.2 லட்சம் முதல் ரூ. 1 கோடி மதிப்பிலான வைர நகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் நகை பிரியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் தனிஷ்க் நிறுவனத்தின் நேர்த்தியான வைர நகை தொகுப்பை பார்க்கலாம். திருமண காலத்திற்கான பிரத்தியேக நகைகளை கொண்டதாக இந்த கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளதால், இளம் பெண்கள், மணமகள்கள் தங்களுக்கு பொருத்தமான வைர நகைகளை தேர்வு செய்ய இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்.

கண்காட்சியில் 500க்கும் அதிகமான தனித்துவமான வடிவமைப்புகள் கொண்ட
நகைகளை நகை ஆர்வலர்களும் வாடிக்கையாளர்களும் பார்க்கமுடியும். கொங்கு
பகுதி மக்கள் மனதை வெல்லும் வடிவமைப்புகள் கொண்ட வைர நகைகளும்
இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

திருமணத்திற்கு மட்டுமில்லாமல் எல்லா சிறப்பு தருணங்களுக்கும் அணிய
அழகிய வைர நகைகளும் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மூன்று
நாட்களில் நகைகளை வாங்கும் போது மொத்த விலையில் 20% வரை தள்ளுபடியை வாடிக்கையாளர்களால் பெறமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *