• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

2ஆம் ஆண்டில் தடம் பதிக்கும் “அரசியல் டுடே” !!

உண்மை செய்தியை இவ்வுலகிற்கு நொடிக்கு நொடி வழங்கி, வாசகர்களிடம் இணை பிரியாத ஒரு பந்தத்தை உருவாக்கி, எந்த பக்கமும் சாயாமல் உத்வேகத்துடன் உண்மை செய்தியை மட்டுமே நோக்கி பயணிக்கும் நமது தாழை நியூஸ் & மீடியாவின் “அரசியல் டுடே” தற்போது தனது 2வது வயதை இன்று (ஆகஸ்ட் 4 ) எட்டியுள்ளதை வாசகர்களாகிய உங்களிடம் பகிர்ந்துக்கொள்ள ஆசைப்படுகிறோம். அதுமட்டுமின்றி தாழை நியூஸ் & மீடியாவின் கிளைகளான அரசியல் டுடே.காம், அரசியல் டுடே யூடியூப், பக்தி, என்டர்டெயின்மென்ட் சேனல்களுக்கும், அரசியல் டுடே சமூகவலைத்தளத்திற்கும் உங்களின் பேராதரவு கிடைத்துள்ளது.எங்களின் பணி மேலும் சிறப்பாக்க உங்களின் ஒத்துழைப்பின்றி சாத்தியமாகாது. 3.5 கோடி வாசகர்களை பெற்றிருக்கும் நமது அரசியல் டுடே .காம் அடுத்த நகர்வுக்கு முற்ப்பட்டுள்ளது. இதற்கு வாசகர்களாகிய உங்களுக்கும் பெரும் பங்குண்டு.எங்களின் தொலைநோக்கு சிந்தனைக்கு வழிகாட்டி ஊக்கப்படுத்தும் உங்களின் ஆதரவு எப்போதும் அரசியல் டுடேவிற்கு வேண்டும். மகிழ்ச்சியுடன் 2ஆம் வருடத்தில் அடி எடுத்து வைக்கிறது உங்கள் தாழை நியூஸ் & மீடியாவின் “அரசியல் டுடே.காம்”.