சிவகாசி அருகே உள்ள பி. எஸ். ஆர். கல்வி குழுமங்களின் 26 ஆவது விளையாட்டு விழா கல்லூரியின் மைதானத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பி .எஸ் .ஆர். கல்வி குழுமங்களின் தாளாளர் ஆர். சோலைச்சாமி தலைமை வகித்தார், கல்லூரியின் இயக்குனர்கள் டாக்டர் அருண் குமார், விக்னேஸ்வரி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கல்லூரியின் முதல்வர் செந்தில்குமார் வரவேற்று பேசினார். கல்லூரியின் டீன் மாரிச்சாமி வாழ்த்தி பேசினார். சிறப்பு விருந்தினராக விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
தொடர்ந்து மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கினார். தொடர்ந்து தேசியக்கொடி ஏற்றிவைத்து மாணவ மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். கல்லூரியின் தாளாளர் ஆர்.சோலைச்சாமி ஒலிம்பிக் கொடியையும், கல்லூரியின் முதல்வர் கல்லூரி கொடியையும், ஏற்றி வைத்தனர்.
.
மாவட்ட மற்றும் மண்டல, மாநில, அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்ட மாணவ மாணவியர்கள் இணைந்து ஒலிம்பிக் தீபம் ஏற்றினார்கள். மின்னணுவியல் துறை கார்த்திக் ஒலிம்பிக் உறுதிமொழி ஏற்க வீரர் வீராங்கனைகள் அதனை முன்மொழிந்தனர்.
கல்லூரியின் உடற்பயிற்சித் துறை பேராசிரியர் சுந்தரமூர்த்தி விளையாட்டு ஆண்டறிக்கையை வாசித்தார். நிகழ்ச்சியில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் மாணவ, மாணவியர்களுக்கு நடைபெற்றது. அதில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு சான்றிதழ்கள், கேடயங்கள், வழங்கப்பட்டது .தொடர்ந்து ஜிம்னாஸ்டிக், சிலம்பம் ,பிரமிடு ,போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

கல்லூரி பேராசிரியர்,பேராசிரியைகளுக்கானகளுக்கான விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட்டது .விளையாட்டு போட்டிகளில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பதக்கத்தை பி. எஸ். ஆர். கல்லூரியின் ஊதா அணி பிஎஸ்ஆர் பொறியியல் கல்லூரியில் பச்சை அணி பதக்கங்களை பெற்றன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகமும் உடற்பயிற்சி துறை பேராசிரியர் பவிதா அசோக்குமார் ஆகியோர் இணைந்து செய்திருந்தனர்.