• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

252 குழந்தைகளுக்கு காய்ச்சல்- அமைச்சர் தகவல்

ByA.Tamilselvan

Sep 15, 2022

சென்னையில் நேற்று 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்காய்ச்சலால் பாதிக்கபட்டிருந்த நிலையில் இதுவரை 252 குழந்தைகள் பாதிக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று ஒரே நாளில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் காய்ச்சல் காரணமாக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில் சென்னையில் 252 குழந்தைகள் இன்ஃப்ளூயன்சா காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசும்போது.. “காய்ச்சல்,சளி ,இருமல் ஆகியவை இன்ஃப்ளூயன்சாவின் அறிகுறிகள். கடந்த 2 ஆண்டுகளாக முககவசம், சமூகஇடைவெளி ஆகியவை கடைபிடிக்கப்பட்டதால் இந்த காய்ச்சல் பாதிப்பு குறைந்திருந்தது. தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது என்றார்.