• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பாதுகாப்பின்றி தங்கி இருந்த 24 குழந்தைகள் மீட்கப்பட்ட சம்பவம்

ByP.Thangapandi

Mar 13, 2025

உசிலம்பட்டி அருகே குழந்தைகள் காப்பகத்தில் முறையான பாதுகாப்பின்றி தங்கி இருந்த 24 குழந்தைகள் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பி.செட்டியபட்டி கிராமத்தில் அமைந்துள்ளது தனியார் விடுதி காப்பகம், இதனுடன் அரசு உதவி பெறும் தனியார் நடுநிலைப்பள்ளியும் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது.,

இந்த குழந்தைகள் காப்பகத்தில் கடந்த சில ஆண்டுகளாக முறையான பாதுகாப்பு மற்றும் உணவு, பராமரிப்பு வசதியின்றி காணப்படுவதாக எழுந்த தொடர் புகாரின் அடிப்படையில் இன்று மதுரை மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் அரவிந்த் தலைமையிலான அலுவலர்கள் நேரில் ஆய்வு செய்தனர்.,

இந்த ஆய்வில் குழந்தைகள் உரிய பாதுகாப்பு வசதிகள் இன்றி குழந்தைகள் தங்கி இருப்பதாக தெரிய வந்த சூழலில் காப்பகத்தில் தங்கி இருந்த சுமார் 24 குழந்தைகளை மீட்டு மதுரையில் உள்ள அரசு அனுமதி பெற்ற குழந்தைகள் காப்பகங்களுக்கு இந்த குழந்தைகள் அழைத்து செல்லப்பட்டனர்.,

சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்த குழந்தைகள் காப்பகம் கால போக்கில் முறையான பாதுகாப்பின்றி மாறியதால் குழந்தைகள் மீட்கப்பட்டு வேறு ஒரு காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.