உலக பாரம்பரிய சோட்டோகான் கராத்தே சம்மேளனம் சார்பாக தேசிய அளவிலான 23 -வது கராத்தே போட்டி கோவா மட்கான் மனோகர் பாரிக்கர் உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

இதில் தமிழகத்தை சேர்ந்த 20 மாணவ மாணவியர் ஆசிரியர்கள் சீஹான் தலைமையில் பங்கு பெற்றனர். 6 வயதுக்குட்பட்டோருக்கான கட்டா பிரிவில் s. தர்ஷன் வெண்கல பதக்கம் சண்டை பிரிவில் வெண்கல பதக்கம் வென்றார்.
7 வயது உட்பட்டோருக்கான பிரிவில் எஸ் அஸ்வந்த் சாய் வெண்கல பதக்கம் சண்டை பிரிவிலும் வெண்கல பதக்கம் வென்றார். 8 வயதுக்குட்பட்டோருக்கான கட்டாபிரிவில் கே அஜய் இரண்டாம் பரிசு வெள்ளி சண்டை பிரிவில் முதல் பரிசு தங்கம் வென்றார்.

8 வயது வயது குட்பட்டோருக்கானகட்டா பிரிவில் கார்த்தி வெண்கலம் சண்டை பிரிவில் வெள்ளி வென்றார். 11 வயது குட்பட்டோருக்கான பிரிவில் ஸ்ரீ சாத்விக் கட்டா பிரிவில் வெண்கலம் வென்றார்.
11 வயதுக்குட்பட்டோருக்கான கட்டாபிரிவில் கோபாலகிருஷ்ணன் வெண்கலம் வென்றார். 12 வயது குட்பட்டோருக்கான பிரிவில் சரவண பிரதீப் சண்டை பிரிவில் வெள்ளி சி கேசவன் கட்டா பிரிவில் வெண்கலம் வென்றார்.
12 வயதுக்கு உட்பட்டோருக்கான கட்டாபிரிவில் பிரதீப் தங்கம் வென்றார். 11வயதுக்குட்பட்டருக்கான பெண்கள் கட்டாபிரிவில் ஜெய் சாய் ஸ்ரீ வெண்கலம் சண்டை பிரிவில் தங்கம் வென்றார்.

14 வயதிற்கு உட்பட்ட மாணவியர் சண்டை பிரிவில் வைஷாலி வெண்கலம் பதக்கம் கொழு கட்டா பிரிவில் வெண்கல பதக்கம் வென்றார்.
20 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் பாலமுருகன் கட்டா ஆப் பிரிவில் தங்கம் குழு கட்டாபிரிவில் வெண்கலம் சண்டை பிரிவில் வெண்கலம் வென்றார். ராஜவர்மன் குழு கட்டா பிரிவில் வெண்கலம் மற்றும் பெண்கள் பிரிவில் வைஷாலி, கட்டா பிரிவில் வெண்கலம்.
குழு கட்டா பிரிவில் வெண்கலம் பயிற்சியாளர்களுக்கான பிரிவில் கண்ணன்
பொன்னுச்சாமி ராஜா திருப்பதி ஆகியோர் பங்கு பெற்றனர். சென்சாய் கண்ணன் சண்டை பிரிவில் தங்கம், சென்சாய் பொன்னுசாமி கட்டா பிரிவில் வெண்கலம், சண்டை பிரிவில் வெள்ளி வென்றார்.

சென்சாய் திருப்பதி கட்டா பிரிவில் வெண்கலம் சண்டை பிரிவில் வெண்கலம் பெற்றுள்ளனர். மொத்தம் 5 தங்கம் 5 வெள்ளி 17 வெண்கலம் 27 பதக்கங்கள் பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு இந்தியாவின் தலைமை பயிற்சியாளர் ஷிகான் சத்ரஜித் சவுத்ரி பரிசுகள் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.