மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிபள்ளம் கிராமத்தில் அகமுடையார் முன்னேற்ற சங்கம் அறக்கட்டளை சார்பாக சுதந்திர போராட்ட வீரர்கள் மாமன்னர் மருது பாண்டியர்களின் 224 வது குரு பூஜையை ஒட்டி அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

அகமுடையார் முன்னேற்ற சங்க அறக்கட்டளை தலைவர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். செயலாளர் தெய்வேந்திரன் பொருளாளர் முத்துக்குமார் முன்னிலை வகித்தனர். வாடிப்பட்டி தெற்கு ஒன்றியதிமுக செயலாளர் பசும்பொன் மாறன் மாலை அணிவித்து மரியாதை செய்தார். முள்ளி பள்ளம் கேபிள் ராஜா அன்னதானத்தை துவக்கி வைத்தார்.

முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி மார்நாட்டாண் வரவேற்றார். உறுப்பினர்கள் ரவி, மகாமுனி ,முத்து இருளர், கணேசன் முருகன், மனோகரன் முனியாண்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.













; ?>)
; ?>)
; ?>)