பெரம்பலூர் வட்டம், செங்குணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ( நூற்றாண்டு பள்ளி) ஆண்டு விழா இன்று பள்ளி வளாகத்தில் நடைப்பெற்றது.
பெரம்பலூர் வட்டார கல்வி அலுவலர் ஜோதிலெட்சுமி தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் அனிதா முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் அமுதா ஆண்டு அறிக்கையை வாசித்தார்.
பெரம்பலூர். வட்டார வள மைய மேற்பார்வையாளர் தேவகி வாழ்த்துரை வழங்கினார் .
2025-26 கல்வி ஆண்டிலற்கான முதல் வகுப்பில் சேர்ந்த புதிய 4 மாணவர்களை வரவேற்று அறிமுகம் செய்து அனைத்து மாணவர்களின் பெற்றோர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவிக்கபட்டன.

விழாவில் முன்னாள் கவுன்சிலர் கலையரசன், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர்கள் சந்திரா , ப தனராசு இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் செல்வி , சரண்யா மற்றும் செங்குணம் குமார் அய்யாவு உட்பட பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டு அனைத்து மாணவர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது.
முன்னதாக பள்ளி உதவி ஆசிரியர் அருள்செல்வி வரவேற்புரை ஆற்றினார். முடிவில் உதவி ஆசிரியர் மைனாவதி நன்றி கூறினார்.