சென்னை தண்டையார் பேட்டை பகுதியைச் சார்ந்த
11- ஆம் வகுப்பு படிக்கும் மாணவி மாலினி.

மூன்று வயதில் இருந்து பரதநாட்டியம் கற்கத் தொடங்கியவர் 16 – வது வயதில் உலக சாதனை முயற்சிக்கு 200 மணி நேர தனி நபர் நடன நிகழ்ச்சி – யாக பரத நாட்டியம் ஆடி வருகிறார்.
காலை 7 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை இந்த நடனம் தொடர்கிறது.
இந்த நடனம் யூடீப்பிலும் நேரலையில் பகிர்ந்தும் வருகிறார்.
இடைவேளை. அனைத்தும் வெளிப்படையாக ஒளிபரப்பு செய்து பதிவிடப்பட்டு ஆவணப்படுத்தப்படுகிறது.

வெறும் பழச்சாறு மட்டும் அருந்திக் கொண்டு இந்த சாதனையைச் செய்து வருகிறார் மாலினி. இந்த 200 மணி நேர சாதனையை டிசம்பர் 23 இல் தொடங்கி ஜனவரி 3-ஆம் தேதி நிறைவு செய்கிறார்.
இது பற்றி மாலினி கூறும் போது,
நான் ஒரு சாதாரண குடும்பத்தில் இருந்து வந்த பெண்.
இந்த 200 மணி நேர சாதனையை செய்யும் முயற்சியில் இறங்கி இருக்கிறேன்.

இந்த முயற்சியில் வெற்றி பெறுவேன் என்று நம்புகிறேன்.
சாதாரண நிலையில் உள்ள நானே இப்படிச் செய்ய முடியும் என்கிறபோது நல்ல நிலையில் உள்ள மற்றவர்களாலும் இதைச்செய்ய முடியும் என்பதற்காகவே இதைச் செய்கிறேன்.
உங்கள் வாழ்த்தும் ஆசீர்வாதமும் வேண்டும் என்றார்.




