• Wed. Mar 18th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

ஜம்மு காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

ByA.Tamilselvan

Sep 25, 2022

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாராவின் மச்சில் பகுதியில் உள்ள டெக்ரி நாரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே இந்திய ராணுவம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் காவல்துறை இரண்டு பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றது. அடையாளம் தெரியாத பயங்கரவாதிகளிடம் இருந்து பல ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இதுகுறித்து காஷ்மீர் மண்டல காவல்துறை கூறியிருப்பதாவது:- குப்வாராவின் மச்சில் பகுதியில் உள்ள எல்ஓசி டெக்ரி நார் அருகே ராணுவம் மற்றும் குப்வாரா போலீசார் இரண்டு பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றனர். கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் அடையாளம் கண்டறியப்படுகிறது. இரண்டு ஏகே 47 துப்பாக்கிகள், இரண்டு கைத்துப்பாக்கிகள் மற்றும் நான்கு கைக்குண்டுகள் மீட்கப்பட்டன. மேலும் விவரங்கள் குறித்து விசாரித்து வருகிறோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.