• Fri. Mar 20th, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

மதுரை அருகே சுற்றுச்சாலையில் பஸ் கவிழ்ந்து 2 பேர் பலி

ByKalamegam Viswanathan

Apr 28, 2023

மதுரை நாகமலை புதுக்கோட்டை சுற்றுச்சாலையில் முன்னால் சென்ற அரசு பேருந்து மீது மோதாமல் இருக்க தனியார் பேருந்து நிலை தடுமாறி கவிழ்ந்தது இதில் இருவர் பலி 35க்கும் மேற்பட்டோர் படுகாயம்
தேனி நோக்கி சென்ற அரசு பேருந்து நாகமலை புதுக்கோட்டை நான்கு வழிச்சாலையில் சென்றபோது பின்னால் வந்த தனியார் பேருந்து மதுரையில் இருந்து போடி சென்றது முன்னாள் சென்ற அரசு பேருந்து மீது மோதாமல் இருக்க நிலை தடுமாறி 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது இதில் பயணம் செய்த பயணிகள் இருவர் பழியானார் மற்றும் 35க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


பிச்சை (65) பெருமாள் தெற்குதெரு ராமநாதபுரம் பேரையூர் தாலுகா,ராமநாதபுரம் தெற்குதெருவை சேர்ந்த பெருமாள் மகன் பிச்சை (வயது 65)எழுமலை மேலத்திருமாணிக்கம் கிராமத்தை சேர்ந்த முத்து கருப்பன் மகன் குருசாமி (வயது 70)
ஆகிய இருவரும் பஸ் கவிழ்ந்த சம்பவ இடத்துலேயே பலியானர்.மேலும் 35க்கும் மேற்பட்டோர லேசான முதல் படுகாயம் மடைந்தனர்.இவர்களை 108 மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.மேலும் இறந்த உடல் கூறு ஆய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டது சம்பவம் குறித்து சமயநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் விபத்து குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில் தனியார் பேருந்து அரசு பேருந்து காட்டிலும் அதிக அளவு வசூல் ஈட்டுவதற்காக அதிக அளவு ஆட்களை ஏத்துவதும் அதிவேகத்தில் செல்வதும் கவனம் செலுத்துவதாகவும் பயணிகள் நலன் காக்க எந்தவித நடவடிக்கையும் எடுப்பது இல்லை எனவும் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர் இதுபோன்ற தொடர்ந்து விபத்துக்கள் ஏற்படுகிறது எனவும் இதனை தடுக்க காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரும் எதிர்பார்ப்பாக உள்ளது என சமூக அலுவலர் தெரிவித்தனர்