தேனி மாவட்டம் கம்பத்தில் ஆலன்ராம் சிட்டோரியோ இண்டர்நேசனல் கராத்தே பள்ளி மற்றும் தேனி மாவட்டக் கராத்தே பள்ளிகளின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் 19வது மாநில அளவிலான கராத்தே போட்டிகள் நடைபெற்றது.

கம்பம் சட்டமன்ற உறுப்பினர், நா.இராமகிருஷ்ணன் போட்டிகளை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். கம்பம் திமுக நகர செயலாளர்கள் வீரபாண்டியன், பால்பாண்டிராஜா,
பிரமலைக்கள்ளர் சமுதாய தலைவர் ஓ.ஆர்.நாராயணன்,
வாவேர் பள்ளிவாசல் ஜமாத் கமிட்டி தலைவர் ஜெயினுலாபுதீன்,
திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் குருகுமரன், மதிமுக மாவட்டச் செயலாளர் வி.எஸ்.கே.இராமகிருஷ்ணன், பாஜக மாவட்டச் செயலாளர் சக்திவேல்,
மத்திய வேளாளர் சங்கத் தலைவர் முருகேசன், கம்பம் ஒன்றியச் செயலாளர் தங்கப்பாண்டியன் முன்னிலை வகித்தனர்.

மதுரை, திண்டுக்கல், சேலம், விருதுநகர், இராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் போட்டிகளில் கலந்து கொண்டனர்.
வயது, எடை, பெல்ட் வாரியாக நடைபெற்ற போட்டிகளில், கட்டா, குமிட்டே என இரு பிரிவுகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

முதல் இரண்டு இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகள் தேசிய அளவில் நடைபெறவிருக்கும் கராத்தே போட்டிகளில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளதாக, மாநில கராத்தே பள்ளிகளின் கூட்டமைப்பின் செயலாளர் டாக்டர்.கராத்தே இராமகிருஷ்ணன் தெரிவித்தார். நிகழ்ச்சியில்
அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.