கவரப்பேட்டை ரயில் விபத்து காரணமாக தெற்கு ரயில்வே அறிவித்தப்படி, இன்று 18 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
திருவள்ளுர் மாவட்டம், கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே பாக்மதி விரைவு ரயில், அங்கு நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலுடன் மோதியதால் 13 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் 19 பேர் காயமடைந்த நிலையில், சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ரத்து செய்யப்பட்ட ரயில்களில் முக்கியமாக, சென்னை சென்ட்ரல்-திருப்பதி எக்ஸ்பிரஸ், விஜயவாடா-சென்னை பினாகினி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் அடங்கும்.
மேலும், சுமார் 18 ரயில்கள் ரத்து செய்யப்பட்டதோடு, பல முக்கிய ரயில்கள் மாற்று வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. விபத்து ஏற்பட்ட பகுதிகளில், சுமார் 15 மணி நேரம் வரை சீரமைப்பு பணிகள் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ரயில் விபத்தால் பயணிகள் பாதிக்கப்படாமல் மாற்று ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
18 ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு
