

ரஷ்யாவிற்கு எதிராக தற்போது தொடங்கியுள்ள போரில் கட்டாய ராணுவ சேவையை அமல்படுத்தியது உக்ரைன் அரசு. உக்ரைனை கைப்பற்றி தன்னோடு இணைத்துக்கொள்ள வேண்டும் என்ற ரஷ்யாவின் நீண்ட கால கனவின் முக்கிய கட்டத்தை தற்போது எட்டியுள்ளது.
அடிபணிய மறுத்த உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ரஷ்ய படைகளுக்கு விளாடிமிர் புடின் உத்தரவிட்டார் . இதனால் தலைநகர் கீவ்வில் குண்டு மழை பொழிய ரஷ்ய ராணுவ படைகள் தொடங்கின. பிறகு உக்ரைனில் உள்ள டோனட்ஸ்கையையும் ரஷ்ய படைகள் தாக்க தொடங்கியுள்ளன. இதனால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது. ரஷ்யா நடத்திய போரில் 137 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் தங்கள் நாடு தனித்து விடப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் விளாடிமிர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் உக்ரைனைச் சேர்ந்த 18 – 60 வயது ஆண்கள் நாட்டை விட்டு வெளியேற அரசு தடை விதித்துள்ளது. அத்துடன் ரஷ்ய படையை எதிர்த்து உக்ரைன் ராணுவத்துக்கு துணையாக நிற்க 10 ஆயிரம் தானியங்கி இயந்திர துப்பாக்கிகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக உக்ரைன் அரசு அறிவித்துள்ளது. இதன்மூலம் கட்டாய ராணுவ சேவையை உக்ரைன் அரசு அமல்படுத்தியுள்ளது.