• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

160 கோடி மதிப்புள்ள கோவில் நிலங்களை மீட்ட செல்லத்துரையை கதர விட்டுட்டாங்களேப்பா…

160 கோடி மதிப்புள்ள கோவில் நிலங்களை மீட்ட செல்லத்துரையை கதர விட்டுட்டாங்களேப்பா… துணை நிற்குமா இந்து சமய அறநிலை துறை!

“கோவில் சொத்துக்களை திருடுநா மட்டும் கொலை நாசம் அல்ல… திருடுனதுக்கு துணை போனாலும் குல நாசம் தான்”…160 கோடி-க்கு மேல் கோவில் நிலங்களை மீட்ட எனக்கு கெட்ட பெயர் இருக்கத்தானே செய்யும் என்று தனது ஆதங்கத்தை கம்பீரமாக வெளிப்படுத்தி இந்து சமய அறநிலையத்துறையின் மதுரை மண்டல இணை ஆணையர் செல்லத்துரை அறிக்கையாக வெளியிட்டு இருக்கிறார்.

க.செல்லத்துரை, இணை ஆணையர், இந்துசமய அறநிலையத்துறை,

அப்படி என்ன அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார் என்பதை அவர் கொடுத்த அறிக்கையிலேயே பார்ப்போம்.

அனுப்புநர் க.செல்லத்துரை, எம்.ஏ.பி.எல்., இணை ஆணையர், இந்துசமய அறநிலையத்துறை, மதுரை – 16.

பெறுநர் : தலைமை செய்தி ஆசிரியர், அரசியல் டுடே தாழை நியூஸ் & மீடியா, சென்னை – 600045.

ஐயா,

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம், மடவார்வளாகம், அருள்மிகு வைத்தியநாதசுவாமி திருக்கோயில் சட்டப்பிரிவு 46(1)ன் கீழ் வகைப்படுத்தப்பட்ட திருக்கோயிலாகும். மேற்படி திருக்கோயில் நிலை-2 செயல் அலுவலர் நிலையில், திரு.S.ஜவஹர் என்பவர் பணிபுரிந்து வந்தார். மேற்படி திருக்கோயில் தொடர்பாக பல்வேறு புகார் மனுக்கள் வரப்பெற்றதை தொடர்ந்து மதுரை மண்டல இணை ஆணையராகிய என்னால் 14.10.2023ல் மேற்படி திருக்கோயிலை ஆய்வு செய்யப்பட்டு, இணை ஆணையர் அலுவலக ந.க.எண்.7523/2023/நேமுஎ, நாள்.05.03.2024ன் மூலம் மேற்படி திருக்கோயிலில் உள்ள குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டு அவைகளை நிவர்த்தி செய்து அறிக்கை சமர்ப்பிக்கவும் மற்றும் ஆய்வு நமுனா பட்டியல் இணைத்து திருக்கோயில் செயல் அலுவலருக்கு அனுப்பப்பட்டது.

  1. மேற்படி திருக்கோயிலில் உள்ள நஞ்சை மற்றும் புஞ்செய் நிலங்களை இந்து சமய அறநிலையச்சட்டம் 1959 மற்றும் Religious Institution (Lease of Immovable Property) Rules 1963ன் படி அறநிறுவனத்திற்கு சொந்தமான சொத்துக்களை தனிநபருக்கு தனிப்பட்ட வகையில் வழங்க வழிவகை இல்லாத நிலையில், திருக்கோயில் செயல் அலுவலரால் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த திரு.ஸ்ரீரெங்கராஜா, த/பெ.P.S.ராமசாமி ராஜா என்பவருக்கு பத்திர எண்.11AC 752783, நாள்.15.02.2024ன் மூலம் திருக்கோயிலுக்குச் சொந்தமான சர்வே எண்.38/1A1 மற்றும் 3B/1A2ல் உள்ள 2.85 ஏக்கர் நிலத்தினையும் மற்றும் பத்திர எண்.11AC 752784, நாள்.15.02.2024ன் மூலம் சர்வே எண்.92/1. 92/1A, 92/2A, 92/28 மற்றும் 92/3ல் உள்ள 2.23 ஏக்கர் செண்ட் நிலங்களை அறநிலையத்துறை விதிகளுக்கு முரணாக துறை அனுமதியின்றி கையூட்டு, பெற்றுக் கொண்டு குத்தகை பத்திரம் ஏற்படுத்திக் கொடுத்தும். சுயலாபம் அடைந்து திருக்கோயிலுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதை தொடர்ந்தும், கிாக்காமிக் கொக்கமான நண்டுசய் நிலhun 197 இளங்களில் திருக்கோயிலுக்குச் சொந்தமான நன்செய் நிலங்கள் 197 இனங்களில் உள்ள 128.59 ஏக்கர் செண்ட் மற்றும் புன்செய் நிலங்கள் 159 இனங்களில் உள்ள 159.58 ஏக்கர்செண்ட் நிலங்களை பொது ஏலத்தில் விட அறிவுறுத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததை தொடர்ந்தும் மற்றும் பிற குறைபாடுகள் தொடர்பாக மேற்படி திருக்கோயில் செயல் அலுவலர் திரு.S. ஜவஹர் என்பவர் மீது குற்றக்குறிப்பாணை ந.க.எண்.8724/2022/அ4, நாள்.08.03.2024ன் மூலம் தமிழ்நாடு குடிமைப்பணி (ஒழுங்குமுறை மற்றும் மேல்முறையீடு) விதி 17(b)ன் கீழ் அன்னார் மீது 07 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு. 17(e)ன் கீழ் குற்றச்சாட்டுகளின் தன்மைகளை கருத்திற்கொண்டு தற்காலிகப்பணிநீக்கம் செய்து உத்தரவிடப்பட்டது. மேற்படி செயல் அலுவலர் 31.07.2024ல் வயது முதிர்வின் காரணமாக ஓய்வு பெற இருந்த நிலையில், ஆணையர் செ.மு.ந.க.எண்.430140/2024/எல்2, நாள்.29.07.2024 உத்தரவு மூலம் ஓய்வுபெற அனுமதி மறுத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

S.ஜவஹர்

  1. மேற்படி திருக்கோயில் செயல் அலுவலரின் பணிநடத்தை குறைபாடுகளுக்காக தமிழ்நாடு குடிமைப்பணி (ஒழுங்குமுறை மற்றும் மேல்முறையீடு) விதி 17(b)ன் கீழ் அன்னார் மீது 07 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு, 17(e)ன் கீழ் குற்றச்சாட்டுகளின் தன்மைகளை கருத்திற்கொண்டு தற்காலிகப் பணிநீக்கம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் மேற்படி செயல் அலுவலர் என் மீது வன்மம் ஏற்படுத்திக் கொண்டு, அவரது வயது முதிர்வு பணிஓய்வு நாளான 31.07.2024க்குப் பிறகு என்னைப் பற்றி Whatsapp உள்ளீட்ட சமூக வளைதளங்களில் என் நடத்தை குறித்து போலியான ஆவணங்களை உற்பத்தி செய்து அவதூறு கருத்துக்களை பரவி வருகிறார்.

அந்த வகையில்,

“The Tamilnadu HR&CE DEPT has recently become highly immoral department wherein majority of the lady and gents officers are having immoral and illegal relationship among them.

The very first notorious officer in this kind, is Mr.Chelladurai, presently joint commissioner Madurai. Being a scheduled caste officer, he is sexually threatening the women officers and clerks, working in his office and the area under his jurisdiction, by misusing his official powers. Many of them sexually adjust him to avoid discuction against them by this notorious men. He is having a habit of taking discuction, on flimsy grounds, against those who are not adjusted to him. But he is playing drama, creating a scene to the effect that he is a honest officer. He has devastated so far, the life of many numbers of women employees working/ worked under him, at various places by sexually molesting them. He is treating the staff working under him, by discriminating them based on caste.

Such officer is unfit to serve in the HR&CE DEPT anymore. So he must be dismissed from service by holding an incamera investigation among the ladies working under his jurisdiction, as soon as possible. His dismissal from service will be celebrated by all the officials of this department like a kumbabisheham of their favourite temple.

The commissioner and the Honourable Minister should take immediate criminal and disc.action against this notorious fellow”.

என்கிற நிலைத் தகவல் ஒன்று WhatsApp சமூக ஊடகத்தில் கடந்த வாரம் பரவல் செய்யப்பட்டது. பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள திருக்கோயில் செயல் அலுவலர் அலுவல் ரீதியாக தான் இடம்பெற்றிருந்த WhatsApp குழுக்களில் சாதாரணமாக ஆங்கிலத்தில் மட்டுமே பதிவுகளை பதிவுசெய்யும் வழக்கம் உள்ளவர் என்பதால், மேலே கண்டுள்ள இந்த நிலைத்தகவலும் திருக்கோயில் செயல் அலுவலர் திரு.S. ஜவஹர் என்பவரால் பதிவு செய்யப்பட்டு, பரவல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

  1. இந்நிலையில், 06.08.2024 முதல் WhatsApp சமூக ஊடகத்தில் மதுரை மண்டல இந்து சமய அறநிலையத்துறையில் பல்வேறு பொறுப்புகளில் பணிபுரிந்து வரும் 21 பெண்கள் சேர்ந்து, இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கும், இந்து சமய
    அறநிலையத்துறையின் விசாகா கமிட்டி தலைவருக்கு முகவரியிட்டும், மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்களுக்கு நகலிடப்பட்டும், எழுதியுள்ளதாகச் சித்தரிக்கப்பட்டுள்ள புகார் மனு ஒன்றில் மதுரை, இணை ஆணையரான என்னை போக்சோ K.செல்லத்துரை என்று குறிப்பிட்டும் என்மீது பாலியல் புகார் உள்ளதாகவும், அதனால் என்மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டியும், 02.08.2024 தேதியிட்ட கடிதம் ஒன்று பரவல் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு, WhatsApp சமூக ஊடகத்தில் பரவல் செய்யப்பட்டு வரும் புகார் மனுவின் அச்சு நகல் இத்துடன் இணைத்துத் தாக்கல் செய்யப்படுகிறது. அதில், என் மீது உண்மைக்கு புறம்பான கீழ்த்தரமான, என் நடத்தையினை ஒழுக்கக்கேடானதாகச் சித்தரித்து அவதூறுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த 02.08.2024 தேதியிட்ட மனுவில் புகார் மனுதாரர்கள் 21 பேர்களும் கையொப்பம் செய்துள்ளதாக காட்டப்பட்டுள்ள கையொப்பம் ஒன்றுகூட புகார் மனுதாரர்களின் உண்மையான கையொப்பமில்லை. இவை அனைத்தும் ஒரே பேனாவினால் ஒரே நபரினால் எழுதப்பட்டுள்ளது போன்று தோற்றமளித்ததால் ஆரம்பக்கட்ட சோதனைக்காக, ஐயத்தின் அடிப்படையில் திருக்கோயில் செயல் அலுவலர் திரு.S.ஜவஹர் என்பவரால் கைகளால் எழுதப்பட்ட ஆவணங்களை பரிசீலித்தபோது, இந்த புகார் மனுவில் செய்யப்பட்டுள்ள கையொப்பங்கள் அனைத்தும் திருக்கோயில் செயல் அலுவலர் திரு.S.ஜவஹர் என்பவரால் மட்டுமே செய்யப்பட்டுள்ளது என்பது தெரியவருகிறது.
  2. மேற்படி புகார் மனு தொடர்பாக 11.08.2024 அன்று மேற்படி திருக்கோயில் செயல் அலுவலர் மீது என்னால் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நிலுவையில் இருந்து வருகிறது. மேலும் புகார் அளித்ததாக சொல்லப்படும் 21 அலுவலர்களும், தங்களது பெயர்களை தவறாக பயன்படுத்தி புகார் அளிக்க பயன்படுத்தியது தொடர்பாக மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளிக்க உள்ளார்கள் என்ற விவரமும் தெரிவித்துக் கொள்கிறேன்.
  3. திருக்கோயில் செயல் அலுவலரால் ஏற்பட்ட பணிநடத்தை குறைபாடுகள் காரணமாக அலுவல் ரீதியாக திருக்கோயில் நலன் கருதி நடவடிக்கை எடுக்கப்பட்டதால், தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி கொண்டு சமூகத்தில் எனக்கு அவமானம் ஏற்படுத்தும் வகையில் Whatsapp மற்றும் சமூகவலைதளங்களில் செய்திகள் பரப்பியதன் அடிப்படையில் தினசரி நாளிதழ்களில் மேற்படி செய்திகள் வரப்பெற்றுள்ளது. மேற்படி புகார் மனு பொய்யான புகார் மனு ஆகும்.

இப்படி அதிர்வன அறிக்கையை வெளியிட்டு விட்டு நம்மிடம் மனம் திறந்த மதுரை மண்டலம் இந்து அறநிலைத்துறையில் இணை ஆணையர் செல்லத்துரை..,

160 கோடி-க்கு மேல் கோவில் நிலங்களை மீட்ட எனக்கு கெட்ட பெயர் இருக்கத்தானே செய்யும் “கோவில் சொத்துக்களை திருடுநா மட்டும் கொலை நாசம் அல்ல… திருடுனதுக்கு துணை போனாலும் குல நாசம் தான்” என்றார் ஆதங்கமாக