• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சின்ன உடைப்பு கிராம மக்கள் 15 வது நாள் தொடர் போராட்டம்

ByKalamegam Viswanathan

Dec 18, 2024

மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் வையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சின்ன உடைப்பு கிராம மக்கள் 15 வது நாள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சின்ன உடைப்பு கிராம மக்கள் போராட்டத்திற்கு ஆதரவாக விருதுநகர், தேனி திண்டுக்கல், ராஜபாளையம், திருநெல்வேலி மாவட்டங்களில் இருந்து தர்ணா போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்காக சின்ன உடைப்பு கிராமத்தில் மட்டும் 189 ஏக்கர் நிலம் கையகப்படுத்த உள்ளது. அதற்காக கடந்த 2009 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட தற்கான அன்றைய மதிப்பீட்டில் கணக்கிடப்பட்டு 2022 ஆம் ஆண்டு பயனாளிகளுக்கு நிதி வழங்கப்பட்டதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

சின்ன உடைப்பு கிராம மக்கள் 2013 நில எடுப்பு சட்டப்படி கணக்கீடு செய்து பணம் வழங்க வேண்டும் என தெரிவித்து வருகின்றனர்.

மேலும் அதன்படி மீள்குடியேற்றம், மாநகராட்சிக்குள் மூன்று சென்ட் இடம் உள்ளிட்டவை வழங்கிய பின்பு நிலத்தை கையகப்படுத்திக் கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.

நாளை 19ஆம் தேதி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சின்ன உடைப்பு கிராம மக்கள் வழக்கு விசாரணைக்கு வரவுள்ள நிலையில் இன்று கிராமத்தில் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.

மேலும் பொதுமக்கள் மதிய உணவு சமைத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியிலிருந்தும் 1000க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர்.

தங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பந்தல் அருகே கத்திரிக்காய் வெண்டை பச்சை மிளகாய் மற்றும் மல்லிகை பூச்செடிகளை கட்டி விவசாய நிலத்தை அரசு கையப் படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் செய்வதாக கூறி வருகின்றனர்.