• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

தூத்துக்குடியில் களவு போன 13 சவரன் தங்க நகைகள் மீட்பு

Byதரணி

Mar 21, 2023

தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வீடு புகுந்து தங்க நகைகளை திருடிய வழக்கில் குற்றவாளி கைது – ரூபாய் 2,60,000/-மதிப்புள்ள 13 சவரன் தங்க நகைகள் மீட்பு.
தூத்துக்குடி ஸ்டேட் பேங்க் காலனியைச் சேர்ந்த கணேசன் மகன் ராமச்சந்திரன் (74) என்பவர் கடந்த 10.03.2023 அன்று தனது மனைவியுடன் விளாத்திகுளத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது இவரது அத்தையான காமாட்சி (98) என்பவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில் அவரது வீட்டிற்குள் புகுந்த மர்மநபர் வீட்டில் பீரோவில் இருந்த 13 சவரன் தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளார்.இதுகுறித்து மேற்படி ராமச்சந்திரன் அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் . சத்தியராஜ் மேற்பார்வையில் தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் . பிரேம் ஆனந்த் தலைமையில் உதவி ஆய்வாளர் . மாணிக்கராஜா மற்றும் தெர்மல்நகர் காவல் நிலைய தலைமை காவலர் . மாணிக்கராஜ், முதல் நிலை காவலர் . மகாலிங்கம், முத்தையாபுரம் காவல் நிலைய முதல் நிலை காவலர் . சாமுவேல், காவலர் . முத்துப்பாண்டி, தென்பாகம் காவல் நிலைய காவலர் . திருமணிராஜன் ஆகியோர் அடங்கிய தூத்துக்குடி உட்கோட்ட தனிப்படை போலீசார் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகள் மூலம் திவீர விசாரணை மேற்கொண்டதில் தூத்துக்குடி முத்தம்மாள்காலனியைச் சேர்ந்த பரமசிவன் மகன் கருவேலமுத்து சங்கர் (22) என்பவர் மேற்படி ராமச்சந்திரன் வீட்டிற்குள் புகுந்த தங்க நகைகளை திருடி தெரியவந்தது.
உடனடியாக மேற்படி தனிப்படை போலீசார் எதிரியான கருவேலமுத்து சங்கரை கைது செய்து, அவரிடமிருந்த திருடப்பட்ட ரூபாய் 2,60,000/- மதிப்பிலான 13 சவரன் தங்க நகைகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.