• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

வார விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து 1,220 சிறப்பு பேருந்துகள்

ByP.Kavitha Kumar

Jan 29, 2025

சுபமுகூர்த்தம், வார விடுமுறை நாட்களையொட்டி சென்னையில் இருந்து 1,220 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுபமுகூர்த்தம் மற்றும் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, நெல்லை, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 31-ம் தேதி 365 பேருந்துகளும், பிப்ரவரி 1-ம் தேதி 445 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 31-ம் தேதி 60 பேருந்துகளும் பிப்ரவரி 1-ம் தேதி 60 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 250 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதாவரத்தில் இருந்து 31-ம் தேதி 20 பேருந்துகளும் பிப்ரவரி 1-ம் தேதி 20 பேருந்துகள் சிறப்பு பேருந்துகளாக இயக்கப்படுகிறது.

இதேபோன்று, ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.