• Sun. Mar 1st, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

ராமநாதபுரம் மண்டபத்தில் இருந்து, தென் கடலான மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடந்த மாதம் 19 ஆம் தேதி கடலுக்கு மீன் பிடிக்க சென்ற 12 மீனவர்கள் மற்றும் 2 விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி சிறைபிடித்து சென்றனர்.

இந்நிலையில், வவுனியா சிறையில் உள்ள 12 தமிழக மீனவர்களை விடுதலை செய்து மன்னார் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது! கைது செய்யப்பட்ட 68 தமிழக மீனவர்களில் 12 மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் மத்திய இணையமைச்சர் ஆகியோர் கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.