• Sat. Oct 11th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

12 மணி நேர வேலை மசோதா -ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் பேட்டி

ByKalamegam Viswanathan

Apr 24, 2023

தெலுங்கானாவில் மக்களுக்கான ஆளுநராக தான் நான் செயல்படுகிறேன் மக்கள் பாதிக்கப்பட்டால் மக்கள் சார்ந்து நான் நிற்கிறேன். இப்போதைக்கு தெலுங்கானாவில் உள்ள அனைத்து மசோதாக்கள் மீதும் நடவடிக்கை எடுத்திருக்கிறேன். -தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் பேட்டி
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தர்ராஜன் சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை வந்தடைந்தார். மதுரை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்திப்பில் கூறியதாவது:
12 மணி நேர வேலை மசோதா குறித்த கேள்விக்கு:
கவர்னராக மட்டுமல்லாமல் ஒரு டாக்டராக உலகம் முழுவதும் ஒரு ஆராய்ச்சி நடக்கிறது அதில் வேலை நேரத்தை அதிகப்படுத்தி விட்டு ஓய்வு நேரத்தையும் அதிகப்படுத்திக்கலாம் என்பதற்காக மருத்துவ ரீதியாகவே 12 மணி நேரம் வேலை செய்து ஒட்டுமொத்த நேர அவகாசத்தை குறைக்கவில்லை கூட்டவும் இல்லை. எவ்வளவு தொழில் செய்கிறோமோ அந்த மணி நேரத்தை எட்டாக பிரித்துக் கொள்ளலாமா? பன்னெண்டா பிரித்துக் கொள்ளலாமா? 12 ஆக பிரித்துக் கொண்டால் ஓய்வு நேரம் அதிகமாக உள்ளது.
இதில் மருத்துவ ஆராய்ச்சி என்ன சொல்கிறது என்றால் சில மக்களுக்கு முன்பு ஆங்கில பத்திரிக்கையில் இதுகுறித்து ஆங்கில கட்டுரை வந்துள்ளது. 12 மணி நேரம் வேலை செய்துவிட்டு அதிகப்படியான நேரம் ஓய்வெடுப்பதால் மீண்டும் பணிக்கு வரும்போது அதன் வேகம் அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த விஷயம் மருத்துவ ரீதியாகவும் உதவி செய்கிறது என்பது சொல்கிறார்கள் ஆனால் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை ஒரு விதத்தில் பொதுமக்களுக்கு விருப்பப்பட்டு எடுப்பவர்களும் இருப்பார்கள். இதனால் இந்த விஷயம் கட்டாயப்படுத்தப்படுவது இல்லை என்பது ஒரு ஆரோக்கியமான சூழ்நிலை.
விருப்பப்படுபவர்கள் அவர் தொழிலுக்கு ஏற்றவாறு எடுத்துக் கொள்ளலாம் ஆனால் இதில் ஒரு விஷயம் என்னவென்றால் விருப்பப்பட்டு தான் எடுக்கிறோம் என்று கட்டாயப்படுத்தி விடக் கூடாது என்பதை கண்காணித்துக் கொள்ளலாம்.
தொழிலாளர் விருப்பத்திற்கு விட்டு விடலாம் என்பது என்னுடைய கருத்து.
சில மாநிலங்களில் மாநில அரசு ஆளுநருக்கு எதிராக ஒரு போக்கு நிலவுகிறது குறித்த கேள்விக்கு:
கவர்னருக்கு எதிரான ஒரு போக்கு அவ்வளவுதான். கவர்னரை அவர்கள் அரசியல் ரீதியாக பார்க்கிறார்கள் நான் தமிழகத்தை பற்றி சொல்லவில்லை தமிழகத்தில் ஆளுநர் ரவியிடம் கேட்டுக் கொள்ளுங்கள்.
தெலுங்கானாவில் மக்களுக்கான ஆளுநராக தான் நான் செயல்படுகிறேன் மக்கள் பாதிக்கப்பட்டால் மக்கள் சார்ந்து நான் நிற்கிறேன். இப்போதைக்கு தெலுங்கானாவில் உள்ள அனைத்து மசோதாக்கள் மீதும் நடவடிக்கை எடுத்திருக்கிறேன்.
தற்போது ராமநாதபுரத்தில் படித்து வரும் எய்ம்ஸ் மருத்துவ மாணவர்கள் எய்ம்ஸ் மருத்துவமனையை பார்க்க முடியாத நிலை உள்ளது குறித்த கேள்விக்கு:
எய்ம்ஸ்சில் படிக்கிறோமா ராமநாதபுரத்தில் படிக்கிறோமா என்பதில்லை மனிதர்களைப் படிக்கிறோமா நோயைப் படிக்கிறோமா என்பதில் உள்ளது.
எய்ம்ஸ்சோ  மருத்துவமனையும் செங்கலால் கட்டப்படுவது இல்லை மனிதர்களின் இதயத்தாலும் மனிதாபிமானத்தாலும் கட்டப்படுகிறது
எய்ம்ஸ் என்பது அதிகப்படியான நவீன தொழில்நுட்பத்தோடு உலக தரம் வாய்ந்தது. எல்லா விதத்திலும் உயர் தொழில்நுட்பத்தோடு கூடிய மருத்துவ வசதி நம் தமிழகத்திற்கு கிடைப்பது மிக்க மகிழ்ச்சியான ஒன்று.
ஆரம்ப காலகட்டத்தில் எல்லாத்துலயும் ஒரு பிரச்சனை இருக்கும். முதல் இரண்டு வருடங்கள் எய்ம்ஸ் தான் படிக்க வேண்டும் என்பதில்லை ஆரம்பகால படிப்பை எங்கு வேண்டுமென்றாலும் படிக்கலாம். எய்ம்ஸ் அப்படிதான்.
எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடித்த பிறகு தான் எல்லோருக்கும் தெரியவரும் எல்லா விமர்சனங்களும் தவிடு பொடி ஆகிவிடும் என தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்..