கோடை விழாவில் ஒரு பகுதியாக கூடலூரில் 11வது வாசனை பொருட்கள் கண்காட்சி துவங்கியது.
பார்வையாளர்களை கவரும் வகையில் ஏலம், பட்டை, கிராம்பு, சோம்பு போன்ற வாசனை திரவியங்களை கொண்டு 13 அடி உயரம், ஆறு அடி நீளம் அளவிலான குன்னூரில் உள்ள பாரம்பரிய மலை ரயில் நிலையம் மற்றும் மலைரயில் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ சாமிநாதன் வாசணை திரவிய காட்சியை திறந்து வைத்தார்.
நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத்துறை மற்றும் தோட்டக்கலை துறை மூலம் கோடை விழா நடத்தப்பட்டு வருகிறது. கோடை விழாவில் இரண்டாவது நிகழ்ச்சியாக கூடலூரில் 11 ஆவது வாசணை திராவிய கண்காட்சி இன்று தொடங்கியது. தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தமிழ்நாடு அரசு தலைமை கொறடா கா.ராமச்சந்திரன் கண்காட்சியை துவக்கி வைத்தனர். இந்த ஆண்டு பார்வையாளர்களை கவரும் வகையில் ஏலக்காய், கிராம்பு, பட்டை, சோம்பு போன்ற 80கிலோ பொருட்களைக் கொண்டு நூற்றாண்டை கடந்த குன்னூர் ரயில் நிலையத்தை மற்றும் மலைரயில் வடிவத்தை 13 அடி நீளத்தில், நான்கு அடி அங்குலம் ,5 அடி உயரத்தில் பிரம்மாண்டமாக வடிவமைத்துள்ளனர்.
இதேபோல் 22 கிலோ சோம்பு, வெந்தயம், குறுமிளகு போன்ற பொருட்களைக் கொண்டு பிரம்மாண்டமாக வண்ணத்துப்பூச்சி வடிவமைப்பை 5- அடி உயரத்தில், 6-அடி நிலத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது .130 – கிலோ எடை கொண்ட கிராம்பு, ஏலக்காய் , பட்டை உள்ளிட்ட 15 வகையான வாசனை திரவிய பொருட்களைக் கொண்டு வாசனை திரவிய அலங்கார வளைவும் ,தமிழர்களின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் ஜல்லிக்கட்டை அடக்குவது போன்ற வீரர் உருவங்களை வாசனை திரவிய பொருட்களைக் கொண்டு தத்ரூபமாக வடிவமைத்துள்ளனர்.
இதேபோல் 20 கிலோ வாசனை திரவிய பொருட்களைக் கொண்டு 5 அடி உயரத்தில் இந்திய வரைபடம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. நீலகிரியில் பிளாஸ்டிக் பொருட்கள் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் தீங்கை வெளிப்படுத்தும் வகையில் 1500 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களைக் கொண்டு பிரம்மாண்டமாக கூடலூர் நகராட்சி சார்பில் வடிவமைக்கப்பட்டுள்ள ராட்சத மனிதன் உருவம் பார்வையாளர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. பிளாஸ்டிக்பொருட்களால் நீலகிரி ஏற்படும் தீங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதேபோல் வனத்துறை சார்பில் நீலகிரியில் வாழக்கூடிய வனவிலங்குகளை பாதுகாப்பது குறித்த கண்காட்சி இடம்பெற்றுள்ளது. இதில் அரிய வகை கருஞ்சிறுத்தை, சிறுத்தை புலி, சிங்கவால் குரங்கு போன்ற பதப்படுத்தப்பட்ட வனவிலங்குகளின் உருவங்கள் சிறுவர் சிறுமிகளை கவர்ந்து வருகிறது. இதேபோல் நீலகிரி விளையக்கூடிய அரிய வகை பழங்களான விளிம்பில் பழம், பன்னீர் கொய்யா, வெண்ணைப் பழம், வெல்வெட் ஆப்பிள், சூரினம் செர்ரி, வடு மாங்காய், அத்திப்பழம், ரம்புட்டான் போன்ற பழங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதனை சுற்றுலா பயணிகள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர் கூடலூர் தனியார் பள்ளி மைதானத்தில் இன்று தொடங்கிய இந்த வாசனை திரவிய கண்காட்சி இன்று முதல் மூன்று நாட்களுக்கு நடைபெற உள்ளது.