கோவையில் ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் 4 வீட்டு மனை திட்டங்கள் அறிமுகம். அறிமுகமான 7 நாட்களில் ரூ.110 கோடி மதிப்பிலான இடங்கள் விற்பனையாகியது.
இந்தியாவின் நம்பர் 1 ரியல் எஸ்டேட் மேம்பாட்டு நிறுவனமான ஜி ஸ்கொயர், கோவையில் 4 வீட்டு மனைத் திட்டங்களை அறிமுகம் செய்து 7 நாளில் ரூ.110 கோடி மதிப்பிலான இடங்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. இது, எங்கள் நிறுவனத்தின் மீது வாடிக்கையாளர்கள் வைத்துள்ள நம்பிக்கையை காட்டுகிறது என்று தெரிவித்துள்ளது. இந்த 4 திட்டங்களின் மொத்த மதிப்பு ரூ.170 கோடி ரூபாய் ஆகும். கோவையில் நீலாம்பூரில் ஜி ஸ்கொயர் பிளிஸ், ராமநாதபுரத்தில் ஜி ஸ்கொயர் உட்லேண்ட், பொள்ளாச்சியில் ஜி ஸ்கொயர் எமரால்டு என்கிளேவ், சரவணம்பட்டியில் ஜி ஸ்கொயர் அர்பனைஸ் ஆகிய 4 வீட்டு மனை திட்டங்களை துவக்கி உள்ளது. இங்கு வீட்டு மனைகள் முறையே ஒரு சென்ட் ரூ.16 லட்சத்திற்கும், ரூ.24.5 லட்சத்திற்கும், ரூ.10.5 லட்சத்திற்கும், ரூ.19.9 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இது குறித்து ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பால ராமஜெயம் கூறுகையில், கோவையில் நாங்கள் அறிமுகம் செய்துள்ள எங்கள் வீட்டு மனை திட்டங்களுக்கு கிடைத்துள்ள வரவேற்பை பார்த்து நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். எங்களின் இந்த 4 திட்டங்களின் மொத்த மதிப்பு ரூ.170 கோடி ரூபாய் ஆகும். அறிமுகம் செய்யப்பட்ட 7 நாட்களில் ரூ.110 கோடி மதிப்பிலான வீட்டு மனைகள் விற்பனையாகி உள்ளன.
மேலும், சென்னையில் எங்களின் வெற்றியைத் தொடர்ந்து, கோவையிலும் எங்கள் நிறுவனத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என தெரிவித்தார்.
ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரி ஜுனைத் பாபு கூறுகையில்..,
கோவையில் ரியல் எஸ்டேட் துறை வேகமாக வளர்ந்து வருகிறது, எங்களின் இந்த புதிய திட்டங்களின் மூலம், அனைத்து வசதிகளுடன் கூடிய உயர்தரமான இடங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறோம். இந்த திட்டங்கள் இங்கு வீடு வாங்க விரும்புபவர்களிடம் நல்ல வரவேற்பைப் பெறும் என்று தெரிவித்தார்.
மேலும் இன்றுவரை, ஜி ஸ்கொயர் 127க்கும் மேற்பட்ட திட்டங்களை நிறைவு செய்து, 15,000 க்கும் மேற்பட்ட திருப்திகரமான வாடிக்கையாளர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. சுமார் 4,000 ஏக்கர் நிலத்தை ஒருங்கிணைத்து, ரியல் எஸ்டேட் துறையில் புதிய சாதனை படைத்துள்ளது. இதே போல் கட்டுமானத் துறையில் புதிய சாதனை படைப்போம் என்று இந்நிறுவனம் உறுதி அளித்துள்ளது.