• Thu. Nov 12th, 2026

தேனி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய 11 ரவுடிகள் கைது..,

ByAjmalkhan saleemraja

Nov 12, 2026

தேனி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும், சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்ததாகவும் 11 ரவுடிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.

தேனி மாவட்டத்தில் பொதுமக்களின் அமைதிக்கும், பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வந்த ரவுடிகள் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.எஸ். பிரவீன் கௌதம் உத்தரவிட்டார்.

இதன்படி, மாவட்டம் முழுவதும் 38 ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டு, தேனி, பெரியகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டனர்.

இதில், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வந்த 11 ரவுடிகளை போலீசார் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் ரவுடிகள் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது தொடர்ந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.